Diesel OTT: தியேட்டரில் வியாபாரம் ஆகாத டீசல்.. ஓடிடியில் விற்பனையாகுமா? டீசல் ஓடிடி ரிலீஸ் தேதி!
சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டீசல் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.பி.ஒய் தீனா, அபூர்வா சிங் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ரப்பர் பந்து' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டீசல். படத்திற்கு டீசல் என பெயர் வைக்கப்பட்டதால், எண்ணெய் வளங்கள் குறித்து பேசும் திரைப்படமாக, இத்திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் கதை, எண்ணை திருட்டு தொடர்பான கதையா? எண்ணை ஊழல் தொடர்பான கதையா? என பலவிதமான குழப்பங்களுடன் கதை நகர்ந்தது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த போதும், அவரவர்களுக்கான கதாபாத்திரம் சரியாக கொடுக்காமல் இயக்குநர் கோட்டை விட்டுவிட்டார் என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஹரிஷ் கல்யானின் டீசல்: தொடர்ந்து படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், டீசல் திரைப்படம் தோல்வி திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசா திரைப்படங்களும் வெளியாகி நல்ல வசூலையும், நல்ல விமர்சனத்தையும் பெற்றனர். இதனால் டீசல் திரைப்படம் எடுபடாமலே போனது.
ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், தற்போது டீசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி டீசல் திரைப்படம் நவம்பர் 21ந் தேதி சன் நெக்ஸ்ட், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டரில் செம அடி வாங்கிய டீசல் திரைப்படம், ஓடிடியில் கல்லாகட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











