Euphorio Review: தயவு செஞ்சு இந்த வெப்சீரிஸை பார்க்காதீங்க.. இளம் பெண்களின் உலகம் இத்தனை மோசமா?

சென்னை: சாம் லெவின்சன் உருவாக்கத்தில் HBOவில் வெளியான Euphoria வெப் சீரிஸ் இதுவரை 2 சீசன்கள் வெளியாகி உள்ளன. அடுத்த சீசன் விரைவில் வெளியாகும் என ஜெண்டாயா, சிட்னி ஸ்வீனி உள்ளிட்டோர் சிக்னல் கொடுத்து வருகின்றனர். ஜியோ ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸை காணலாம்.

Gen Z என சொல்லப்படும் நவயுக இளைஞர்கள் எந்தளவுக்கு போதைக்கும் பாலியல் இச்சைக்கும் அடிமையாகி கிடக்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுவது போல இந்த வெப்சீரிஸ் பச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது.

ott euphoria review

ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சொல்வது போல வெப்சீரிஸ் முழுக்கவே அடல்ட் காட்சிகளாக நிரம்பி வழிகின்றன. எந்தவொரு சென்சார் தடையும் ஓடிடியில் இல்லாத நிலையில், சாம் லெவின்சன் இஷ்டத்துக்கும் இயக்கி உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இந்த வெப்சீரிஸை கொண்டு சென்றிருக்கிறார்.

யூஃபோரியா கதை: Euphoria என்றால் தமிழில் பரவசம் என்பது பொருள். இந்த கதை முழுக்கவே பார்த்தாலே பரவசம் தான். ஹை ஸ்கூல் மாணவர்கள் மத்தியில் நடக்கும் காதல், காமம் மற்றும் போதை கதை தான் இந்த வெப்சீரிஸின் கதை. ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்டின் காதலியும் அந்த படத்தின் ஹீரோயினுமான ஜெண்டயா தான் இந்த வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்துள்ளார். வெப்சீரிஸின் 2 சீசன்களிலும் போதைப் பொருளுக்கு அடிமையான ஓரினச்சேர்க்கையாளராக படுமோசமாக நடித்திருப்பார். ஜெண்டயாவையே தூக்கிச் சாப்பிடும் கதாபாத்திரத்தில் சிட்னி ஸ்வீனியின் நடிப்பும் ஆடைகளற்ற உடலும் இளைஞர்களை கெடுத்து விடும்.

ott euphoria review

ஷேம் ஷேம் பப்பி ஷேம்: ஜெண்டாயா, மவுடி அப்பாடோ, சிட்னி ஸ்வீனி, ஜேக்காப் எலார்டி, அலெக்ஸா டெமி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த வெப்சீரிஸில் பெண்களின் நிர்வாணக் காட்சிகளை தாண்டி அதிகப்படியாக ஆண்களின் முழு நிர்வாணக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஒரு எபிசோடுக்கு ஒருமுறையாவது ஆண்குறிகளை அப்படியே அப்பட்டமாக காட்டுவது போல படுமோசமாக இந்த வெப்சீரிஸை உருவாக்கியுள்ளனர். சிட்னி ஸ்வீனியின் உடலுறவு காட்சிகள் முதல் சீசனில் இருந்து இரண்டாவது சீசன் வரை ரசிகர்களின் ஹார்ட் பீட்களை எகிற வைக்கின்றன.

ott euphoria review

கோல்டன் குளோப் விருது: சர்வதேச அளவில் 87 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் அதிகபட்சமாக 28 விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை வெப்சீரிஸ் முழுவதும் போதைக்கு அடிமையான இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஜெண்டாயா பெற்றது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்களின் உலகம் நிஜமாகவே எந்தளவுக்கு மாறியிருக்கிறது. பெற்றோர்கள் அவர்களை எந்தளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். தனிமை காரணமாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் நுழையும் போதைப் பொருள் அவர்களை எந்தளவுக்கு சீரழிக்கிறது. துப்பாக்கி கலாச்சாரம் என பல்வேறு விஷயங்களை இந்த வெப்சீரிஸ் அலசி ஆராய்ந்திருக்கிறது.

ott euphoria review

பார்க்கலாமா? வேண்டாமா?: இளைஞர்கள் மத்தியில் உலகம் முழுவதும் ஏற்கனவே பிரபலமான இந்த வெப்சீரிஸை குடும்பத்துடன் நிச்சயமாக பார்க்க முடியாது. கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் இதுபோன்ற வெப்சீரிஸ்களை பார்க்காமல் இருப்பதே நல்லது. அந்தளவுக்கு வெப்சீரிஸின் கலர் டோன் மற்றும் மூட் நம்மையே மனதளவில் பாதிக்கும் அளவுக்கு இயக்குநர் உருவாக்கியுள்ளார். பார்ட்டி, ஓரினச்சேர்க்கை, போதைப் பொருள், காதல் தோல்வி, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, துரோகம் என பல உணர்ச்சிகளை அடுக்கியிருக்கும் வெப்சீரிஸாக இந்த யூஃபோரியா அமைந்துள்ளது.

More from Filmibeat

Read more about: euphoria review ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X