ஹார்ட் பீட்டுக்கு எண்டே கிடையாது.. திடீரென ரீனா போட்ட போஸ்ட்.. கிளைமேக்ஸ் என்ன ஆகுமோ?
சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப்சீரிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை வெளியாகும் எபிசோடுக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் நடிகை தீபா பாலு அவசர பிரிவில் படுத்திருக்காமல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த காலத்தில் எல்லாம் டிவி சீரியல் பார்ப்பார்களா? என கலாய்த்த காலம் எல்லாம் சென்று கிட்டத்தட்ட 96 எபிசோடுகளை கடந்துள்ள ஹார்ட் பீட் தொடரை ரசிகர்கள் ரொம்பவே ரசித்து பார்த்து வருகின்றனர். அதற்கு காரணமே அந்த தொடரில் வரும் டாக்டர் ரதி மற்றும் அவரது மகள் ரீனா கதாபாத்திரங்கள் தான்.

டாக்டர் ரதியாக நடிகை அனுமோல் தூள் கிளப்பி வரும் நிலையில், அவரது மகள் ரீனாவாக நடிகை தீபா பாலு அசத்தி வருகிறார்.
உயிர் பிழைப்பாரா ரீனா?: மருத்துவமனையை சுற்றி நடக்கும் கதையை உணர்வுகளுடன் பின்னி பிணைந்து அழகான உருவாக்கியுள்ளனர். டாக்டர் ரதி இளம் வயதில் விஜய் என்பவரை காதலித்து அவரது குழந்தைக்கும் தாயாகிறார். ஆனால், சந்தர்ப்ப சூழல் காரணமாக விஜய் மற்றும் ரதி இருவரும் பிரிய, குழந்தையையும் அனாதை இல்லத்தில் விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை தான் ரீனா. அது வளர்ந்து அம்மா வேலை செய்யும் மருத்துவமனையிலேயே டாக்டராக வேலை பார்க்க, ரதி தான் அம்மா என்பது தெரிய வருகிறது. ஆனால், அப்பா யார் என்பது தெரியவில்லை. கடைசியாக விஜய் தான் அப்பா என்பது தெரிய வர, அவருக்கு விபத்து ஏற்பட்டு விடுகிறது. தனது மகளுக்கு அறுவை சிகிச்சை செய்து விஜய் ரீனாவின் உயிரை காப்பாற்றுவாரா? இல்லை ரீனாவுக்கு என்ன ஆகும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
முடிவு அல்ல தொடக்கம்: ஹார்ட் பீட் முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசனும் வெற்றிகரமாக நிறைவு பெற உள்ளது. இத்துடன் இந்த வெப் தொடர் நிறைவடைந்துவிடும் என ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில், இது முடிவாக இருக்கலாம். அல்லது புதிய தொடக்கமாகவும் இருக்கலாம் என ரீனா ட்விஸ்ட் வைத்துள்ளார். வெப்சீரிஸ்களில் அப்படியே நட்டாத்துல விட்டுவிட்டு முடிப்பதை போல இந்த 2வது சீசனை முடிக்காமல் இருந்தாலே நல்லது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











