This Week OTT Release - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் தெரியுமா?.. வீட்டில் செம பொழுதுபோக்குதான்.. இதோ முழு விபரம்

சென்னை: ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியானாலே கொண்டாட்டம்தான். வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு கண்டுகளிக்க ரசிகர்கள் இப்போது அதிகம் விருப்பப்படுகிறார்கள். அந்தவகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் ரிலீஸாகின்றன, ரிலீஸாகியிருக்கின்றன என்ற விபரத்தை இதில் பார்க்கலாம்.

திரையரங்குகளுக்கு சென்று படங்கள் பார்ப்பது ஒருகாலத்தில் பலருக்கு ஒருவித கடமையாகவே இருந்தது. இப்போதும் அந்த கடமையுணர்ச்சி இருந்தாலும் ஓடிடியின் வளர்ச்சி அதனை கொஞ்சம் பாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இருக்கும் விலைவாசிக்கு திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தோடு படம் பார்ப்பதற்கு பதிலாக; ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருந்தால் கம்மியான செலவில் வீட்டில் இருந்தபடி படங்களை பார்ப்பது ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.

வாரா வாரம் ரிலீஸ்: தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸாக வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி படங்களும், வெப் சீரிஸ்களும் ஓடிடியில் வாரா வாரம் ரிலீஸாகின்றன. அந்தவகையில் கடந்த நான்காம் தேதியிலிருந்து வரும் பத்தாம் தேதிவரையில் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

Here are Details about This Week OTT Release Movies
Photo Credit:

பறந்து போ: ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் முழுமையாக இல்லை என்பதுதான் பலரின் கருத்து. இருப்பினும் படத்தை ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க அந்தப் படம் கடந்த ஐந்தாம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது.

மாமன்: அதேபோல் சூரி கதை எழுதி நாயகனாக நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் முழுக்க கிரிஞ்ச் தனங்கள் நிரம்பி வழிவதாக விமர்சனங்கள் எழுந்த்ன. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு பாசிட்டிவ் ரிசல்ட்தான் கிடைத்தது. இப்படமானது நாளை முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாதும் அறியான்: எம்.கோபி எழுதி த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் யாதும் அறியான் திரைப்படத்தில் தம்பி ராமையா, அப்புக்குட்டி, தினேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படமானது ஆஹா ஓடிடி தளத்தில் நாளை முதல் வெளியாகவிருக்கிறது. அதேபோல் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்திருந்த ஓஹோ எந்தன் பேபி படம் நாளை நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகிறது. மற்ற மொழிகளை பொறுத்தவரை மாயசபா திரைப்படம் (தெலுங்கு) இன்று முதல் சோனில் லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது. அதேபோல் வெனஸ்டே சீசன் 2 வெப் சீரிஸ் நேற்று முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X