ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?.. இதோ படங்களின் லிஸ்ட்
சென்னை: ஓடிடியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளில் வெளியான படங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஓடிடிக்கு வருகின்றன. அதேபோல் சில படங்களும், ஏகப்பட்ட வெப் சீரிஸ்களும் நேரடியாக ஓடிடியில் வருகின்றன. தியேட்டரில் க்ளிக் ஆகாத படங்கள்கூட ஓடிடியில் க்ளிக்கான கதையெல்லாம் உண்டு. இந்தச் சூழலில் இவ்வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடியில் ரிலீஸாகும் என்ற விவரம் தெரியவந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்களின் லைஃப் ஸ்டைல் பெரும்பாலும் மாறிவிட்டது. பல வேலைகள் இப்போது வீட்டிலிருந்தே நடக்க ஆரம்பித்திருக்கின்றன. ஏற்பட்ட ஏகப்பட்ட மாறுதல்களில் ஓடிடியின் வளர்ச்சியும் முக்கியமான ஒன்று. போகப்போக ஓடிடியின் வளர்ச்சி குறைந்துவிடும் என்றுதான் பலரும் கணித்தார்கள். ஆனால் அவர்களின் கணிப்புகள் அனைத்துமே தவிடுபொடியாகிவிட்டன. இந்திய அளவில் அதன் வளர்ச்சி புயல் வேகத்தில் இருக்கிறது.
தமிழிலும் நல்ல வளர்ச்சி: தமிழிலும் ஓடிடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால் தியேட்டரின் மவுசை குறைக்கும் அளவுக்கு ஓடிடியில் மக்களின் கவனம் அதிகம் திரும்பியிருக்கிறது. சூர்யாவின் ஜெய் பீம், சூரரைப் போற்று, விக்ரமின் மகான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடியில்தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை தவிர்த்து பல இயக்குநர்கள், நடிகர்கள் ஓடிடி வெப் சீரிஸ், ஓடிடி ரிலீஸுக்கு தனி கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

வாரா வாரம் ரிலீஸ்: இதற்கிடையே தியேட்டரில் ரிலீஸாகி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகுதான் படங்கள் ஓடிடியில் ரிலீஸாக வேண்டும் என்று தியேட்டர் அசோசியேஷனும் கட்டுப்பாட்டினை கொண்டு வந்தது. அந்தவகையில் தமிழில் தியேட்டரில் ரிலீஸான படங்கள் அந்த கால அளவுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸாகின்றன. இவை தவிர்த்து ஓடிடி ரிலீஸுக்கென்றே பிரத்யேகமாக தயார் ஆகும் படங்கள், வெப் சீரிஸ்களும் இருக்கின்றன.
இந்த வார ரிலீஸ்: இந்நிலையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என்ற விவரத்தை பார்க்கலாம். அதன்படி ஸ்ரீகணேஷ் இயக்கி சித்தார்த், சரத்குமார், தேவயானி என பலர் நடித்திருந்த 3 பிஹெச்கே திரைப்படம் நாளை முதல் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் பிரமோத் சுந்தர் இயக்கியிருந்த கலியுகம் படம் கடந்த 28ஆம் தேதி முதல் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
நெட்ஃப்ளிக்ஸில், அமேசானில்: காந்தாரா படத்தில் நடித்து புகழடைந்த சப்தமி ஹவுடா உள்ளிட்டோர் நடித்திருக்கும் தம்முடு திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும், ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் ஐந்தாவது பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் நாளை ரிலீஸாகின்றன. மேலும் ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கட்ஸ் படமும் நாளை டென்ட்கொட்டாவில் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











