ஆடு ஜீவிதம் ஓடிடி ரிலீஸ்.. எப்போ, எதிர்பார்க்கலாம் தெரியுமா?.. ரசிகர்கள் வெயிட்டிங்

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பிளெஸ்ஸி-பிருத்விராஜின் ஆடுஜீவிதம். இந்தப் படம் பென்யாமின் எழுதி 2009ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதெமி விருது வென்ற The Goat's Life நாவலின் தழுவல் ஆகும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் பிருத்விராஜுடன் அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த மாதம் தியேட்டரில் வெலியானது. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது

மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார். தமிழில் அவர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

Here are the details about Aadu Jeevitham Movie OTT Release

மிரட்டும் வில்லன்: ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க கோபிகா அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வில்லன் என்றாலே தொண்டை கிழிய கத்தி வசனம் பேச வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு பக்குவமான குரலால் பேசி பார்வையால் மிரட்டி வில்லன் ரோலை செய்திருந்தார் பிருத்வி. இதனையடுத்து அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.

தமிழிலும் வாய்ப்புகள்: கனா கண்டேன் படத்தில் வில்லனாக நடித்தாலும் அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று உணர்ந்துகொண்ட மற்ற இயக்குநர்கள் அவரை தமிழில் கதாநாயகனாகவே புக் செய்தனர். அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.பிறகு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.தொடர்ந்து சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன், அபியும் நானும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இயக்குநர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலிப்பவர் பிருத்விராஜ். 2019ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய லூசிஃபர் படம், 2022ஆம் ஆண்டு மோகன்லாலை மீண்டும் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்தன. அதிலும் ப்ரோ டாடி படம் மிகச்சிறந்த காமெடி படமாகவும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரிஅப்படம் வெளியானது. அடுத்ததாக ஆடுஜீவிதம் படம் மார்ச் 28ஆம் தேதி வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படமானது பென்யாமின் எழுதிய The Goat's Life என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்ற இளைஞன் சவுதிக்கு வேலைக்கு சென்ற சூழலில் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழில் கிடைக்க; அப்போது வாய்த்த அடிமை வாழ்க்கையிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்ற லைனை வைத்துக்கொண்டு சுவாரசியம் குறையாமல் நாவல் செல்லும். தற்போது அது படமாகியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஓடிடி ரிலீஸ்: படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியிருப்பதாகவும்; படத்தை மே மாதம் ஓடிடியில் வெளியிட ஹாட் ஸ்டார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X