அமரன் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. செம விவரம் சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் அயலான் திரைப்படம் பல வருடங்கள் கழித்து வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக குழந்தைகளை ரொம்பவே ஈர்த்ததால் போட்டிக்கு களமிறங்கிய தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது அயலான். வரிசையாக இரண்டு படங்களும் ஹிட்டடித்திருப்பதால் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

sivakarthikeyan


அமரன்: சூழல் இப்படி இருக்க ரங்கூன் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது.

முகுந்த் வரதராஜன்: இப்படமானது இந்திய ராணுவத்தில் பணியாற்றி சண்டையின்போது வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதன் காரணமாகவும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் எகிறியது. படமானது பான் இந்தியா அளவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸானது.

பாசிட்டிவ் விமர்சனம்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் சூப்பர் வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சிவா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு கொண்டாடப்படுகிறது. அதிலும் சாய் பல்லவி மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்துவிட்டார். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படம் ரிலீஸான 28 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்று கருதப்பட்டது. ஆனால் தியேட்டரில் படத்துக்கு இப்போதுவரை மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது. எனவே அமரன் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கியிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் படக்குழு சார்பில் மேலும் ஒரு வாரத்துக்கு ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்கலாம் என்று கேட்டதாகவும்; அதற்கு நெட்ஃப்ளிக்ஸும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமரன் ஓடிடியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X