Independence day 2024- சுதந்திர உணர்வு ஊட்டக்கூடிய டாப் 5 படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?

சென்னை: இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த தேசத்துக்காக உயிர் நீத்து சுதந்திரம் வாங்கி தந்த முன்னோர்களை பலரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல் சுதந்திர உணர்வு ஊட்டக்கூடிய படங்களையும் பலரும் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்குவார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் தங்கலான், டிமாண்ட்டி காலனி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் ஓடிடியில் இருக்கும் சுதந்திர உணர்வை ஊட்டக்கூடிய டாப் 5 படங்களை இதில் பார்க்கலாம்.

கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலாம் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் இப்போது எல்லோரது மொபைலிலுமே ஓடிடி தளங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான்.

Independence day independence day 2024

தமிழில் சூர்யாவின் விதை: அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேபோல் வெற்றிமாறனும் பேட்டைக்காளி என்ற வெப் சீரிஸுக்கு கதை எழுதியிருந்தார். இந்தியா முழுவதுமே இப்போது ஓடிடி ரிலீஸ் அதிகரித்திருக்கிறது.

சுதந்திர உணர்வு: ஓடிடியில் ஏகப்பட்ட ஜானர்களில் படங்கள் இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக வெளியான படம் முதல் பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்கள்வரை ஓடிடியில் கிடைப்பவை. அந்தவகையில் சுதந்திர உணர்வை ஊட்டக்கூடிய படங்களும் இருக்கின்றன. அப்படி இருக்கும் படங்களில் டாப் 5 படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஷெர்ஷா: தமிழில் பில்லா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம்தான் ஷெர்ஷா. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கார்கில் போரில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிக்கொண்டிருக்கிறது.

ராஸி: மேக்னா குல்சார் இயக்கத்தில் ஆலியா பட் நடித்திருக்கும் படம் ராஸி. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்தும்; இந்தியாவின் உளவாளியாக இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரரை திருமணம் செய்துகொண்டதை தழுவியும் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும். செம த்ரில்லராக இருக்கும் இப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

ரங் தே பசந்தி: ராகேஷ் ஓம் பிரகாஷ் மேக்ரா இயக்கத்தில் ஆமிர்கான் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் ரங் தே பசந்தி. பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண் தனது தாத்தாவின் டைரி குறிப்பின் அடிப்படையில் இந்தியா வந்து சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆவணப் படம் எடுக்கிறார். அந்த ஆவண படத்தில் ஆமிர்கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட வரலாறை அறிவதும்; அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களுமாக படம் நகரும். மிகப்பெரும் ஹிட்டடித்த இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

ராக்கெட் பாஸ் 1,2: அபய் பண்ணு (சீசன் 1), நிகில் அத்வானி (சீசன் 2) இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ்தான் ராக்கெட் பாய்ஸ். இதன் முதல் சீசன் கடந்த 2022ஆம் ஆண்டும், இரண்டாவது சீசன் கடந்த வருடமும் வெளியாகின. உலக அரங்கில் இந்தியாவை அணுசக்தி மிக்க நாடாக மாற்றுவது மற்றும் இஸ்ரோ உருவாக்கம் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து 1940லிருந்து 1960கள்வரை நடக்கும் கதைக்களத்தில் இந்த வெப் சீரிஸ் உருவாகியிருக்கும். இதனை சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணலாம்.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருந்த படம் இந்தியன். தமிழ் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டான இந்தப் படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியானது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சேனாபதி; சுதந்திரத்துக்கு பிறகு தலை தூக்கிய ஊழல், லஞ்சம் ஆகியவைகளுக்கு எதிராக இன்னொரு சுதந்திர போரை நடத்துவதுதான் கதை. இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். சமீபத்தில்தான் இதன் இரண்டாம் பாகம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X