Lal Salaam - எந்த ஓடிடியில் லால் சலாம் ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் படக்குழு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் அப்செட் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க லால் சலாம் படம் எந்த ஓடிடியில் ரிலீஸாகும் என்பது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார். இரண்டு பேரும் பிரிந்திருந்தாலும் இதுவரை விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குந்ராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க அவர் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், செந்தில், உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்போடு கடந்த ஒன்பதாம் தேதி வெளியானது. கிரிக்கெட்டையும், மத பிரச்னையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது லால் சலாம். இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் நேற்று படம் பார்க்க சென்றிருந்தனர்.
கலவையான விமர்சனம்: ஆனால் படமோ ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. படத்தில் திரைக்கதை சுமார்தான். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கூறும் ரசிகர்கள்; ரஜினிகாந்த் படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வந்தாலும் மனதில் நிற்கும்படி ஒரு காட்சிக்கூட இல்லை. அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் மாஸ் சீன்கள்கூட அரைத்த மாவையே அரைத்தது போல்தான் இருந்தது என்று ஓபனாகவே பேசியிருந்தனர்.
வசூல் நிலவரம்: படம் வெளியான முதல் நாளில் 4.5 கோடி ரூபாய் மட்டும்தான் வசூலித்தது. இதனையடுத்து இரண்டாவது நாளான நேற்று முதல் நாள் வசூலைவிடவும் குறைவாக 3.55 கோடி ரூபாய்தான் வசூல் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கடுமையான அடி வாங்கியிருப்பதால் ஐஸ்வர்யாவும், படக்குழுவும் கடும் அப்செட்டில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லால் சலாம் ஓடிடி: இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகவில்லை. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில்தான் அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்கள் ஸ்ட்ரீமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











