டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அந்தகன்.. எப்போ, எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்

சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது விஜய்யுடன் சேர்ந்து நடித்த GOAT படத்திலும் பிரசாந்த்தின் நடிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக அவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தச் சூழலில் அந்தகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

prashanth ott andhagan

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.

சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.

ரீ என்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தார். அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே GOAT படத்தில் நடிப்பதற்கும் கமிட்டானார். ஒருபக்கம் வெங்கட் பிரபு - விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்தது எதிர்பார்ப்பை எகிற வைக்க; மறுபக்கம் விஜய்யுடன் பிரசாந்த் நடிப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோட் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பிரசாந்த்தின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸே இருந்தது.

அந்தகன் ஓடிடி: இந்நிலையில் அந்தகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்தப் படமானது ஆஸ்ட்ரோ டிவியில் இருக்கும் விண்மீன் சேனலில் அந்தகன் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி ஸ்ட்ரீமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சேனலில் ஸ்ட்ரீமாகும்போது இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X