அடேங்கப்பா புஷ்பா 2 ஓடிடி உரிமம் இவ்வளவுக்கு வியாபாரமா?.. இவங்கதான் வாங்கிருக்காங்களாம்
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்தச் சூழலில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். அந்தத் திரையுலகில் அவர் ஃபேமஸாக இருந்தாலும் இந்திய அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்தப் படம் பான் இந்திய லெவலில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இதன் காரணமாக அவர் பான் இந்தியா ஸ்டாராக இப்போது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டான ஸ்டைல்: வியாபார ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் புஷ்பா நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் படத்தில் அல்லு அர்ஜுனின் மேனரிஸமும் உலக அளவில் ட்ரெண்டானது. முக்கியமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புஷ்பா ஸ்டைலை அடிக்கடி யூஸ் செய்ததும் ட்ரெண்டானது. அதேபோல் படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலும் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 க்ளிம்ப்ஸ்: சூழல் இப்படி இருக்க முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு ஸ்வீட் செய்தியாக படமானது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருப்பதாலும்; அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதாலும்; பிற படங்களின் ரிலீஸுகள் தள்ளிப்போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புஷ்பா 2 டீசர்: சூழல் இப்படி இருக்க அல்லு அர்ஜுன் சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள்வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். புஷ்பா 2 படக்குழு சார்பாக அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்துக்குள் 30 மில்லியன் பார்வைகளை கடந்து யூட்யூபில் சாதனை படைத்தது.
ஓடிடி உரிமம்: இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும்; தெலுங்கு திரையுலகில் ஒரு படம் 100 கோடி ரூபாய்க்கு ஓடிடிக்கு விற்பனை ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











