ரெடியாகுங்க ரசிகர்களே.. தமிழில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?.. முழு விவரம்
சென்னை: இந்தியாவில் இப்போது ஓடிடியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் ஓடிடியில் பார்ப்பதற்குமான ஆவலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான வெப் சீரிஸ்கள், படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.
கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலாம் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் இப்போது எல்லோரது மொபைலிலுமே ஓடிடி தளங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான். அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தியேட்டருக்கு பின் ஓடிடி: ஒருபக்கம் ஓடிடிக்கெனவே பிரத்யேக வெப் சீரிஸ்கள் உருவாக்கப்படும் நிலையில் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களும் சில வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வந்துவிடுகின்றனர். அதனாலேயே மக்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தியேட்டருக்கு சென்று பார்க்காமல் ஓடிடிக்கு அந்தப் படம் வரும்வரை காத்திருக்கும் பழக்கமும் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
வியாபாரமும் ஜோர்: அதேபோல் தியேட்டரில் ரிலீஸாகவிருக்கும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் ரிலீஸுக்கு முன்னதாக பெரும் தொகை கொடுத்து வாங்கும் வழக்கமும் இருக்கிறது. விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் இந்த ஓடிடி ப்ரீ பிஸ்னெஸ்ஸால் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இந்தச் சூழலில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகப்போகும் படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழில் என்ன ரிலீஸ்: தமிழைப் பொறுத்தவரை இந்த வாரம் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. மேலும் இருள் படமும் அதே தளத்தில் வெளியாகிறது. அதேபோல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தலைவன் (மலையாளம்), அடியோஸ் அமிகோ நெட்ஃப்ளிக்ஸிலும், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் பவி கேர் டேக்கர் படமும் வெளியாகிறது.
தெலுங்கைப் பொறுத்தவரை ஆஹா ஓடிடி தளத்தில் சத்யா, பார்கவி நிலையம், சிம்பா படங்களும், ஈடிவி வின் தளத்தில் நிந்தா படமும் வெளியாகின்றன. மேலும் ஹிந்தியில் தனாவ் சீசன் 2 வெப் சீரிஸ் சோனி லிவ் தளத்திலும், Call Me Bae வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமிலும், கில் திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்திலும் விஸ்ஃபாட் படம் ஜியோ சினிமாவிலும் வெளியாகவிருக்கின்றன. ஆங்கிலத்தை பொறுத்தவரை English Teacher வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரிலும், அவுட் லாஸ்ட் சீசன் 2, The Perfect Couple, Selling Sunset Season 8 சீரிஸ்களும்,Rebel Ridge, Bad Boys: Ride or Die படங்களும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகின்றன. , மேலும் the fall guy படம் ஜியோ சினிமாவில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











