ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடியில் செம ட்ரீட்.. என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?.. சூப்பர் கொண்டாட்டம்
சென்னை: தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் ஓடிடியில் பார்ப்பதற்குமான ஆவலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான வெப் சீரிஸ்கள், படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முழு லிஸ்ட் இதோ.
சினிமா பார்ப்பது என்றாலே கொண்டாட்டம்தான். மூன்று மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து ஒரு உலகத்துக்குள் நம்மை அழைத்து செல்வது சினிமா மட்டும்தான். இதன் காரணமாக உலகம் முழுவதும் சினிமா ஒரு மதம் போன்றே பாவிக்கப்படுகிறது. அதிலும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம். ஆரம்பத்தில் தியேட்டர்களில் மட்டும் ரிலீஸாகிக்கொண்டிருந்த படங்கள் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் வளர்ச்சி அதிகம் ஆனதால் அதிலும் ரிலீஸாகிக்கொண்டிருக்கின்றன.

ஆதிக்கம் செலுத்தும் ஓடிடி: இப்போது பெரும்பாலானவர்களின் கைகளில் ஸ்மார்ட் ஃபோன் இருக்கின்றன. அதன் காரணமாக பலரது கவனம் ஓடிடியில் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் எல்லாம் ஓடிடியின் தாக்கம் சாத்தியமா என்று கேள்வி எழுந்த காலம் போய்; இப்போது ஓடிடியின் தாக்கம்தான் எங்கும் விரவியிருக்கிறது. தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆவது, ஓடிடிக்கென்று பிரத்யேகமாக வெப் சீரிஸ்கள் உருவாவது என்று களைகட்டுகிறது ஓடிடி ஃப்ளாட்பார்ம்.
கட்டணங்களும் ஓகேதான்: தியேட்டருக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் கட்டணம், இடைவேளையில் தின் பண்டங்களுக்கான செலவும், பயண செலவும்; உடற்சோர்வு என பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஓடிடிக்கு சந்தா கட்டிவிட்டால் குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே பல செலவுகளை மிச்சப்படுத்தி படம் பார்க்கும் நிலை இருப்பதால் மக்களின் நாட்டம் ஓடிடியில் அதீதம் இருக்கிறது.
இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்: வாரா வாரம் எப்படி தியேட்டரில் படம் வெளியாவது ஒருகாலத்தில் கொண்டாட்டமாக இருந்ததோ அதேபோல் இப்போது ஓடிடி ரிலீஸும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. அந்தவகையில் இந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட தங்கலான் படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதேபோல் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பேச்சி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.மேலும் காஃபி, சாலா ஆகிய படங்களும் ஆஹாவில் நாளை வெளியாகின்றன. அதேபோல் ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டடித்த பஞ்சாயத்து வெப் சீரிஸின் தமிழ் வெர்ஷனான தலைவெட்டியான் பாளையம் அமேசான் ப்ரைமில் நாளை ரிலீஸாகிறது. ஆற்றல் திரைப்படமும் ப்ரைமில் ரிலீஸாகிறது. மேலும் வாழ என்ற மலையாள படமும் ஹாட் ஸ்டாரில் நாளை ரிலீஸாகிறது. கடந்த வாரம் தமிழ் படங்கள் பெரிதாக ஓடிடியில் ரிலீஸாகவில்லை. ஆனால் இந்த வாரம் ஏகப்பட்ட தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸாவதால் வீக் எண்டை குடும்பத்தோடு என்ஜாய் செய்ய ரசிகர்கள் தயாராகலாம்.


Click it and Unblock the Notifications











