ஓடிடி ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. தமிழில் என்னென்ன படங்கள் எதில் ரிலீஸ் தெரியுமா?.. இதோ லிஸ்ட்
சென்னை: ஓடிடியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளில் வெளியான படங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஓடிடிக்கு வருகின்றன. அதேபோல் சில படங்களும், ஏகப்பட்ட வெப் சீரிஸ்களும் நேரடியாக ஓடிடியில் வருகின்றன. இதனை காண்பதற்கு ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருக்கின்றார்கள். அந்தவகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகப்போகும் படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றிய அறிவிப்புகள் இப்போது வெளியாகியிருக்கின்றன.
ஒட்டுமொத்த உலகத்தையும் சில வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தனது பிடிக்குள் வைத்திருந்தது. அதன் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடியின் வளர்ச்சி இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்தன. ஆரம்பத்தில் பலரின் கருத்தாக இருந்தது என்னவென்றால்; ஓடிடி கலாசாரம் சில காலத்துக்கு பின்பு குறைந்துவிடும் என்பதுதான். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவில் ஓடிடியின் மவுசு கணிசமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விரும்பும் குடும்பத்தினர்: முக்கியமாக ஒரு படத்தை பார்க்க குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் செலவு, பார்க்கிங் செலவு, இடைவேளையில் தின்பண்டங்கள் வாங்கும் செலவு என ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டில் அதற்காகவே குறிப்பிட்ட அளவை விடவும் அதிகம் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது. இதன் காரணமாக தியேட்டருக்கு சென்று பார்ப்பதைவிடவும் ஓடிடிக்கு சந்தா கட்டிவிட்டு கொஞ்சம் பொறுமையாக இருந்தால் குடும்பத்துடன் பெரிய செலவு எதுவுமே இல்லாமல் நிம்மதியாக பார்க்கலாம் என்ற நிலை உருவானதால் குடும்பத்தினரும் ஓடிடியில் படங்கள் பார்ப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.
தமிழிலும் நல்ல வளர்ச்சி: தமிழிலும் ஓடிடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால் தியேட்டரின் மவுசை குறைக்கும் அளவுக்கு ஓடிடியில் மக்களின் கவனம் அதிகம் திரும்பியிருக்கிறது. சூர்யாவின் ஜெய் பீம், சூரரைப் போற்று, விக்ரமின் மகான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடியில்தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அதேசமயம் ஜெய் பீம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கக்கூடாது என்று சூர்யாவும் சமீபத்தில் வருத்தப்பட்ட சம்பவம் எல்லாம் அரங்கேறியது.
வாரா வாரம் ரிலீஸ்: இதற்கிடையே தியேட்டரில் ரிலீஸாகி ஏறத்தாழ 48 நாட்களாவது நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அசோசியேஷனும் கட்டுப்பாட்டினை கொண்டு வந்தது. அந்தவகையில் தமிழில் தியேட்டரில் ரிலீஸான படங்கள் இந்த கால அளவுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸாகின்றன. அந்தவகையில் இந்த வாரம் என்னென்ன தமிழ் படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
இதோ லிஸ்ட்: அந்தவகையில் டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்த அந்தகன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை ஸ்ட்ரீமாகிறது. அதேபோல் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் அடித்த பிரதர் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்திலும், கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், ஷ் என்ற தமிழ் படம் ஆஹா ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீமாகவிருக்கிறது. துல்கர் சல்மான் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்துவிட்டது. இவை தவிர்த்து பாராசூட் வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரிலும், விகடகவி வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications