Chithha OTT Release - சித்தா ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனம் எது தெரியுமா?.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: Chithha OTT (சித்தா ஓடிடி) சித்தா ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த் ஒரு மெகா ஹிட் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டக்கர் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண்குமார் இயக்க நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

Here is the details about Chithha Movie OTT Release

பாராட்டை பெற்ற சித்தா: சித்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று புகழ்ந்த ரசிகர்கள் இது கண்டிப்பாக சித்தார்த்தின் பெயர் சொல்லும்படியான படம் என்று கூறினர்

கமல் ஹாசன் பாராட்டு: சித்தா படத்துக்கு சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அதன்படி கமல் ஹாசன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இறுதியில் அழுத்தத்துடன் ரசிகர்கள் வெளியே வராமல் இப்படி நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. மகாநதி படத்தைவிட இது நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேபோல் இயக்குநர் மணிரத்னமும் சித்தா படத்தை பாராட்டியிருக்கிறார்.

வசூலிலும் சூப்பர்: இப்படி விமர்சன ரீதியாக படம் கொண்டாடப்பட்ட அதேவேளையில் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதாவது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்தார்த் ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறார்.இந்த உற்சாகம் அவரை இதுபோன்ற சிறந்த படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கூறினர்.

Here is the details about Chithha Movie OTT Release

சித்தா ஓடிடி: இந்நிலையில் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்துக்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸை அடுத்து சித்தா படத்தை வாங்குவதற்காக ஓடிடி நிறுவனங்கள் கடும் போட்டியில் குதித்தனவாம். இறுதியாக பெரும் தொகையை கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும்; சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சித்தா படம் ஓடிடியில் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Read more about: chithha சித்தா ott
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X