OTT Release - ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. டிசம்பர் முதல் வாரத்தில் ஓடிடி ரிலீஸ் படங்கள்.. இதுதான் லிஸ்ட்
சென்னை: OTT Release ( ஓடிடி ரிலீஸ்) டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்கள் குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.
சினிமா என்றாலே தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற மைண்ட் செட்தான் பலரிடம் இருந்தது. ஆனால் கொரோனா தொற்று வந்து உலகை சிறை பிடித்து வைத்த சமயத்தில் ஓடிடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. திரைக்கலைஞர்களும் ஓடிடிக்கென்று தனியாக படங்களும், வெப் சீரிஸ்களும் இயக்க ஆரம்பித்துவிட்டனர். மக்களும் வீட்டில் அமர்ந்தபடி குடும்பத்துடன் பார்க்க முடிவதால் ஓடிடியில் பார்ப்பதற்கு வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.

டிசம்பர் முதல் வார ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் ஓடிடியில் ரிலீஸாகவிருக்கும் படங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி நாளை தூதா படம் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங்காக இருக்கிறது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நாக சைதன்யா, பார்வதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மிஷன் ரானி கஞ்ச்: 1989ஆம் ஆண்டு ரானி கஞ்ச்சில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்ததை அடுத்து அதற்குள் இருந்தவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதுதான் மிஷன் ரானி கஞ்ச். அக்ஷய் குமார், பரிணிதி சோப்ரா உள்ளிட்டோ நடித்திருக்கும் இப்படம் நாளை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. போபால் விஷவாயு சம்பவத்தை வைத்து உருவான தி ரயில்வே மென் வெப் சீரில்சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனவே இதுவும் அதேபோல் வரவேற்பை பெறும் என ரசிகர்கள் கூறுகின்றன
ஸ்வீட் ஹோம் சீசன் 2: கொரியன் வெப் சீரிஸான ஸ்வீட் ஹோம் முதல் சீசன் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. எனவே அதன் இரண்டாம் சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸாகிறது ஸ்வீட் ஹோம் சீசன் 2. முதல் சீசன் பெற்ற வரவேற்பை போல் இரண்டாவது சீசனுக்கும் கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
இண்டியான ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி: ஹாலிவுட் படமான இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இண்டியானா ஜோன்ஸ் மற்றும் அவரது பேத்தி செய்யும் விஷயங்களை வைத்து படம் உருவாகியிருக்கிறது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











