Jawan OTT - ரசிகர்களே ரெடியா?.. ஜவான் ஓடிடி ரிலீஸ் எப்போது எதில் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

மும்பை: Jawan OTT (ஜவான் ஓடிடி) ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.;

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜவான். அனிருத் இசையமைக்க ஷாருக்கானே படத்தை தயாரித்திருக்கிறார். படமானது கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியானது. பதான் படம் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜவான் வெளியானதால் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

Here is The Details about Jawan Movie Release In OTT Platform

நல்ல ரெஸ்பான்ஸ்: அட்லீ ஹிந்தியில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்திருப்பதால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருந்தது. அதேபோல் ஷாருக்கான் ரசிகர்களும் படத்தை எதிர்பார்த்தனர். இப்படி பல எதிர்பார்ப்புடன் படம் சென்றவர்களில் பெரும்பாலானோர் படத்துக்கு நல்ல விமர்சனத்தையே கொடுத்து வந்தனர்.

அட்லீக்கு பாராட்டு: முக்கியமாக ஷாருக்கானை பல்வேறு கெட்டப்புகளில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம்தான் பட்டனர். அவரை இப்படியும் பயன்படுத்தலாம் என அட்லீ பாலிவுட்டுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் என புகழும் ரசிகர்கள் ஒரு கமர்ஷியல் கதையை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் பாலிவுட்டுக்கு சொல்லியிருக்கிறார் அட்லீ என தெரிவிக்கின்றனர்.

காப்பி ஜவான் : ஒருபக்கம் பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்தாலும் அதற்கு ஈடாக நெகட்டிவ் விமர்சனமும் தலை தூக்கியுள்ளது. அதாவது ரமணா, சர்கார், ஆரம்பம் உள்ளிட்ட படங்களை கலந்து மூவி மிக்சராக அட்லீ கொடுத்திருக்கிறார். ஒரு சீன்கூட புதிதாக இல்லை. படம் ரொம்பவே நீளமாக செல்கிறது. பல இடங்களில் லேக் ஆகியிருக்கிறது என தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தன.

பாக்ஸ் ஆபிஸ்: அதேசமயம் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்துவருகிறது. அதன்படி ரிலீஸான இரண்டே நாட்களில் 200 கோடி ரூபாயை வசூலித்த முதல் ஹிந்தி படம் என்ற சாதனையை படைத்த ஜவான் இதுவரை 520 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே விரைவில் 1000 கோடி க்ளப்பில் படம் இணைவது உறுதியாகிவிட்டது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் ஜவான் படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸாகிறது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பெரும் தொகை கொடுத்து ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் படம் அக்டோபர் முதல் வாரத்தில் ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X