Mark Antony OTT Release - மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. இதோ புதிய தகவல் உள்ளே

சென்னை: Mark Antony (மார்க் ஆண்டனி) மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

விஷால் நடிப்பில் கடந்த சில வருடங்களாகவே வெளியான எந்தப் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த அந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்: படம் டைம் ட்ராவலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. எப்போதும் டைம் ட்ராவல் ஜானர் படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெறுவதுண்டு. அந்தவகையில் இந்தப் படத்துக்கும் மிகச்சிறந்த ரெஸ்பான்ஸை கொடுத்தனர். ரசிகர்கள். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அது எதுவும் ரசிகர்களை பாதிக்காதபடி தனது திரைக்கதையை அமைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

Here is the Mark Antony OTT Release Details

எஸ்.ஜே.சூர்யா: படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றால் அது எஸ்.ஜே.சூர்யாதான். அப்பா, மகன் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் புகுந்து விளையாடியிருந்தார். குறிப்பாக சில்க் ஸ்மிதா தோன்றும் காட்சியில் தன் மனசாட்சியுடன் எஸ்.ஜே.சூர்யா பேசுவது; மகன் எஸ்.ஜே.சூர்யாவிடம் ஃபோனில் பேசும் காட்சி க்ளைமேக்ஸ் காட்சி என பல இடங்களில் ஸ்கோர் செய்திருந்தார்.

சில்க் ஸ்மிதா ரீ க்ரியேஷன்:அதேபோல் படத்தின் இன்னொரு ஹைலைட்டாக அமைந்தது என்றால் அது சில்க் ஸ்மிதாவின் ரீ கிரியேஷன். விஷ்ணு ப்ரியா என்ற இன்ஸ்டா ரீல்ஸ் போடுபவரை அழைத்துவந்து சில சிஜிக்களை செய்து சில்க் ஸ்மிதாவை கொண்டுவந்துவிட்டார்கள். அதுதொடர்பான காட்சிக்கு ட்ரெய்லரிலேயே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. தியேட்டரிலோ ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

வசூல் வேட்டை: இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் விஷாலுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. இதுவரை அவரது எந்த படமும் நூறு கோடி ரூபாய் வசூலை தொட்டதில்லை. அதனை மாற்றி காட்டியிருக்கிறது மார்க் ஆண்டனி. இதுவரை 100 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி இந்தப் படம் இந்த மாதத்துக்குள் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்துக்கு சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே ஓடிடியில் ரிலீஸாகும்போது வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X