Chandramukhi 2 OTT Release - சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்.. எப்போது எதில் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Chandramukhi 2 OTT Release (சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்) சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு படம் வெளியானது. அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது.

எல்லாமே காரணம்: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் உலகம் முழுவதும் படம் வெளியானது. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் போல் இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர்.
கலவையான விமர்சனங்கள்: பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க ரசிகர்கள் சென்றனர். ஆனால் ரசிகர்களுக்கு படமானது முழுமையான திருப்தியை தரவில்லை. இதன் காரணமாக படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. குறிப்பாக லாரன்ஸையும், கங்கனா ரணாவத்தையும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

சந்திரமுகியா இது?: அதிலும் கங்கனாவை ரொம்பவே கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமே ஜோதிகாவின் நடிப்புதான். ஆனால் இதில் கங்கனா ரொம்பவே சொதப்பிவிட்டார். பி.வாசு எதற்காக கங்கனாவை இதில் கமிட் செய்தாரோ என்று ஓபனாகவே கேள்விகளை கேட்டுவருகின்றனர். படம் இப்படி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் டீசண்ட்டான வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ்; இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது நவம்பர் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை எட்டு கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











