GOAT படத்துக்கு எழுந்த புதிய சிக்கல் இதுவா?.. தலைதெறிக்க ஓடிய ஓடிடி நிறுவனம்?.. புதிய தகவல்
சென்னை: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் பவதாரிணி உயிரிழந்ததால் தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் GOAT படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.
நிறுத்தப்பட்ட ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. பக்ரீத் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டு அசுரத்தனமாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் GOAT படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் இல்லை: இதற்கிடையே GOAT படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் இப்போது அதுகுறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது விஜய் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே அதன் ஓடிடி உரிமை விற்றுவிடுவது வழக்கம். லியோ படத்துக்குக்கூட அப்படித்தான் நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
ஆனால் GOAT படத்துக்கு அப்படி நடக்கவில்லையாம். படத்தை வாங்குவதற்கான முயற்சியில் இறங்கி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியபோது மிகப்பெரிய தொகையை GOAT பட தயாரிப்பு தரப்பிலிருந்து சொன்னதாகவும் அதை கேட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இவ்வளவு தொகையெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி இடத்தை காலி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமேசான் பிரைம் நிறுவனத்திடம் ஓடிடி உரிமை குறித்து பேச்சுவார்த்தை இப்போது நடந்துவருவதாக திரைத்துறையிலிருந்து பேச்சுக்கள் அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











