Jawan OTT Release: ஜெயிலர் ஒரு மாசத்துல ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால், ஜவான் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: Jawan OTT Release date - அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியானது.
அட்லீ இயக்கத்தில் அப்பா மகன் என ஷாருக்கான் டபுள் ஆக்சனில் நடித்த ஜவான் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் அந்த படம் 614 கோடி ரூபாயை வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ரிலீசான ஒரு மாதத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில், ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும் இந்நேரம் ஓடிடியில் வெளியாகி இருக்குமே என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தியேட்டரிலேயே ஜவான் திரைப்படம் தினமும் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் தாமதமாகி இருப்பதாக கூறுகின்றனர்.
ஷாருக்கான் எதையும் தரல: ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு சொகுசு கார் மற்றும் செக் வழங்கினார்.
ஷாருக்கான் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய நிலையில், அனிருத், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுக்கு வெயிட்டான பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பளத்தை தாண்டி ஷாருக்கான் எதையும் தரவில்லை என்றே தெரிகிறது.

ஜவான் ஓடிடி ரிலீஸ் தேதி: ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 250 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், 30 நாட்களில் அந்த படத்தை ஓடிடியில் போடக்கூடாது என ஷாருக்கான் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்ட நிலையில் 45 நாட்கள் கழித்து ஓடிடியில் போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாத இறுதியில் அக்டோபர் 28-ஆம் தேதி ஜவான் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஷாருக்கானின் ஜவான் படத்தை ஓடிடியில் தான் பார்ப்பேன் என அடம்பிடிக்கும் ரசிகர்கள் இந்த மாத இறுதி வரை வெயிட் பண்ணித்தான் ஆக வேண்டும். ஜவான் படத்துடன் வெளியான அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ் பொலிஷெட்டி ஓடாத நிலையில், அக்டோபர் 6ம் தேதியே ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











