Netflix movies: கியரை மாற்றும் நெட்ஃப்ளிக்ஸ்.. வரிசையாக களமிறங்கும் டாப் 5 திரைப்படங்கள்! இதோ லிஸ்ட்
சென்னை: இந்த வருடம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகும் டாப் 5 படங்கள் குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.
ஓடிடி வளர்ச்சி தற்போது அசுர வேகத்தில் இருக்கிறது. ஆஹா, ஹாட் ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 என பல ஓடிடி தளங்கள் வந்திருக்கின்றன. இதனால் ஓடிடியில் வெளியாகும் படங்களும் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் இந்த வருடம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் டாப் 5 படங்கள் குறித்து காணலாம்.

மர்டர் மிஸ்டரியின் இரண்டாவது பாகம்
ஜெரிமி கேர்லிக் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் மர்டர் மிஸ்டரி. இதன் இரண்டாம் பாகமாக மர்டர் மிஸ்டரி உருவாகிறது. ஆடம் சாண்ட்லர், ஜெஜிஃபர் அனிஸ்டர்ன், மார்க் ஸ்ட்ராங், அடீல் அக்தர், ஜோடி டர்னர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படமான நெட்ஃப்ளிக்ஸில் மார்ச் 31ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.

எக்ஸ்ட்ராக்ஷன் படத்தின் இரண்டாவது பாகம்
எக்ஸ்டராக்ஷன் படத்தின் முதல் பாகமானது கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது.சாக் ஹர்ஹர்வே இயக்கிய அந்தப் படம் ஜார்ஜிய கேங்ஸ்டரால் கடத்தப்பட்ட ஒரு குடும்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக எக்ஸ்ட்ராக்ஷன் 2 வெளியாகவிருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் ஜூன் 16ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.

நெட்ஃளிக்ஸில் வெளியாகும் தி மதர்
பிரபல நடிகை ஜெனிஃபர் லோபஸ் நடித்திருக்கும் இப்படத்தை நிக்கி காரோ இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெனிஃபர் லோபஸுடன் ஒமரி ஹார்ட்விக், பால் ராசி, ஜோசப் ஃபியன்னஸ், க்ராஃபோர்டு உள்ளிட்டோ நடித்திருக்கின்றனர். இந்தப் படமானது மே மாதம் 12ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஹார்ட் ஆஃப் ஸ்டோனும் நெட்ஃப்ளிக்ஸில்
இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் ஆலியா பட் இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். டாம் ஹார்பர் இயக்கியிருக்கும் படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன். இப்படத்தில் காக் கேடாட், ஜேமி டோர்நன், பால் ரெடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சிஐஏ ஏஜண்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகிறது.

சைன்ஸ் ஃபிக்ஷனுடன் வெளியாகும் They Cloned Tyrone
ஜூயல் டெய்லர் இயக்கியிருக்கும் They Cloned Tyrone படமனது சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகியிருக்கிறது. ஜான் போயேகா, ஜேமி ஃபாக்ஸ், மேகன் சௌசா, டெம்பர்லா பெரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமானது ஜூலை 21ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த டாப் 5 படங்களை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications











