OTT: Hi Nanna - நானியின் ஹாய் நான்னா ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. மிருணாளை பார்க்க ரெடியாகுங்க!
சென்னை: நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 7ம் தேதி வெளியான ஹாய் நான்னா திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பல நல்ல திரைப்படங்கள் ஓடிடியில் ரசிகர்களுக்காக வெளியாகிறது. தியேட்டருக்குச் சென்று இந்த டிசம்பர் மாதம் படம் பார்க்காத பலரும் ஓடிடியில் குடும்பத்துடன் படங்களை பார்க்க ரெடியாகி வருகின்றனர்.
டிசம்பர் 29ம் தேதியான நேற்று நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், அடுத்து வாரம் நெட்பிளிக்ஸில் இன்னும் ஒரு புதிய படம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

ஹாய் நான்னா: இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் டோலிவுட்டின் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் இந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற அந்த திரைப்படமும் வெள்ள பாதிப்புகளால் தமிழ்நாட்டில் சரியாக ஓடவில்லை. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
ஃபீல் குட் மூவி: நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் தந்தை பாசம், காதல் என எமோஷன்களின் கலவையாக வெளியான ஹாய் நான்னா திரைப்படம் ஃபீல் குட் மூவி என கொண்டாடப்பட்டது. தென்னிந்திய திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்து விடும் நிலையில், ரசிகர்கள் வெயிட் பண்ணி ஓடிடியிலேயே பார்த்து விடும் நிலை உருவாகி உள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில்: வரும் ஜனவரி 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஹாய் நான்னா திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
அனிமல், சலார் ஆன் தி வே: ஓடிடியில் இந்த வாரம் அன்னபூரணி, பார்க்கிங் உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில், வரும் ஜனவரி 4ம் தேதி ஹாய் நான்னா வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனிமல் மற்றும் சலார் உள்ளிட்ட படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











