ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா? வீரன் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சென்னை: ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான வீரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீரன்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Hiphop adhis veeran movie is releasing on june 30th on amazon ott

ஹிப்ஹாப் ஆதியின் வீரன்: மரகத நாணயம் என்ற ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கி அதில் வெற்றி கண்ட ஏ.ஆர்.கே.சரவணனின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் வீரன். இந்த படத்தில் வினய் ராய், அதிரா ராஜ், முனிஷ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை: சூப்பர் ஹீரோ படங்களை அதிகம் பார்த்திராத தமிழ் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது எனலாம். மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஹிப்பாப் ஆதிக்கு ஒரு விசேஷ சக்தி கிடைக்கிறது. இதனால், தனது சொந்த ஊருக்கு வரப்போகும் ஆபத்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்துவிடசொந்த ஊரை காப்பற்ற சிங்கப்பூரில் இருந்து வரும் ஆதி, கிராமத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

Hiphop adhis veeran movie is releasing on june 30th on amazon ott

மின்னல் முரளி காப்பியா: டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'மின்னல் முரளி' படத்தில் சில மாற்றங்களை செய்து சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹிப் ஆதியை களம் இறக்கி உள்ளார் இயக்குநர். ஆனால் மின்னல் முரளி படத்துடன் வீரன் படத்தை ஒப்பிடும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படம் மின்னல் முரளி திரைப்படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படத்தை ட்ரோல் செய்தனர்.

ஓடிடியில்: இந்நிலையில் வீரன் திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் 30ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கூடஆகாத நிலையில் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி நடித்தது மட்டுமில்லாமல் இசையும் அமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X