ஹிப் ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு நிலைமையா? சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான பிடி சார்!
சென்னை: நடிகர் ஹிப் ஹாப் ஆதி, வீரன் படத்துக்குப் பிறகு பிடி சாராகக் களமிறங்கிய திரைப்படம் பிடி சார். கடந்த மே மாதம் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் இப்படத்தை ஜாலியாக வீட்டில் இருந்து பார்க்கலாம்.
ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த திரைப்படம் பிடி சார். இதில், அனிகா, காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படத்தில், ஹிப்ஹாப் ஆதி நடித்த மட்டுமில்லாமல் இசையமைத்தும் இருக்கிறார்.

பிடி சார் படத்தின் கதை: பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஹிப் ஹாப் ஆதியை, அவரது அம்மா நேரம் சரியில்லாத காரணத்தால் பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண்ணான அனிகா சுரேந்திரன் மூலம் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அதுவரை விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி, சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி சமாளித்தார் என்பது தான் பிடி சார் படத்தின் கதை.

கலவையான விமர்சனம்: பாலியல் தொந்தரவு, தினமும் அனைத்து வயது பெண்களும் சந்திக்கும் பிரச்னைகளை பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் மீது சமூகம் நிகழ்த்தும் தாக்குதல்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளார் இயக்குநர். இருப்பினும் சொல்ல வந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் ஏதோ மோம்போக்காக சொல்லியதால், அவை மனதில் பதியாமல் போய்விட்டது. தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஓடிடியில்: இப்படத்தை பிரபல அமேசான் பிரைமில் நிறுவனம் வாங்கி இருந்த நிலையில், இப்படம் ஜூன் 21ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று பிடி சார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை பார்க்க தவறவிட்டவர்கள், ஜாலியாக வீட்டில் குடும்பத்தோடு இந்த படத்தை பார்த்து மகிழலாம்.
ஹிப் ஹாப் ஆதி: பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் "கிளப் லே மப்பு லே" என்ற ஆல்பம் பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ஆறு பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து பாடகர், இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் ஆதி, மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து நட்பே துணை, சிவக்குமாரின சபதம், அன்பறிவு,வீரன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல், அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அரண்மனை 4 படத்திற்கும் இசையமைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











