Hisaab Barabar Review: 5 பைசா திருடுனா தப்பா?.. பிரபல வங்கியின் மெகா ஊழலை அம்பலப்படுத்தும் மாதவன்!

சென்னை: மாதவன், கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹரி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் அஸ்வினி திர் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Hisaab Barabar படம் ஓடிடி வெளியீடாக வெளியாகி உள்ள நிலையில், அதனை பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த ஓடிடி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

அந்நியன் படத்தில் வருவது போல ”5 பைசா திருடுனா தப்பா.. 5 கோடி பேர்கிட்ட 5 கோடி தடவை ஐந்து ஐந்து பைசாவா திருடுனா” என சியான் விக்ரம் கேட்கும் போது ஒட்டுமொத்த தியேட்டரே ஷாக்காகி நிற்பது போன்ற ஒரு பிரபல வங்கியின் மெகா ஊழலை மையப்படுத்திய கதையை கையில் எடுத்துக் கொண்டு மாதவனை வைத்து எடுத்த இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்ப்போம்.

ott review madhavan


ஓடிடியில் மாதவன் நடிப்பில் வெளியாகும் வெப்சீரிஸ்களும், படங்களும் வெற்றிப் பெற்று வரும் நிலையில், இந்த Hisaab Barabar தேறியதா? தேறவில்லையா? என்பதை அலசி அராயலாம் வாங்க.

Hisaab Barabar கதை: கணக்கை சரிபண்ணு (Settle Accounts) என்கிற அர்த்தத்துடன் உருவாகியுள்ள இந்தி டைட்டில் தான் இந்த ஹைசாப் பராபர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்க்கும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்த ராதா கிருஷ்ண மோகன் (மாதவன்) Do Bank எனும் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் நடத்திய 2000 கோடி ரூபாய் மோசடியை தனது 27.50 காசு கணக்கில் இருந்து காணாமல் போக அங்கிருந்து மோப்பம் பிடித்து வங்கி வாடிக்கையாளர்களை அந்த வங்கியின் ஓனர் நம்ம கத்தி பட வில்லன் நீல் நிதின் முகேஷ் எப்படி ஏமாற்றி கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறார். சட்டத்துக்கு முன் அதை கொண்டு வந்து நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கித் தந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.


பார்க்கலாமா? வேண்டாமா?: கதையை கேட்கும் போது ஸ்கேம் 1992, லக்கி பாஸ்கர் போல சூப்பராக இருக்கும் என நினைத்து ஏமாந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. மாதவனின் அசத்தலான நடிப்பைத் தவிர பெரிதாக எதுவும் இல்லை. இயக்குநர் நல்ல கதையை எடுத்துக் கொண்டாலும் அதை எந்தளவுக்கு இந்தி மசாலா கலந்து சொதப்பலான ஸ்க்ரீன்பிளேவுடன் கொடுக்க முடியுமோ கொடுத்து மொக்கைப் போட்டிருக்கிறார். ஆனாலும், பொதுமக்கள் தங்கள் பணத்தின் மீது கவனம் வைக்க வேண்டும் என்றும் மோசடிகளுக்கு வழிவகை செய்ய நம்முடைய அலட்சியமே காரணமாக அமைந்துவிடக் கூடாது என்கிற விழிப்புணர்வு கொடுக்கும் விதத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்றே சொல்லத் தூண்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X