OTT: ஹனிமூன் போன இடத்துல கல்யாணம் பண்ண பொண்ணு தங்கச்சின்னு வரும் அதிர்ச்சி.. Honeymoonish விமர்சனம்!

சென்னை: குவைத் நாட்டில் உருவாக்கப்பட்ட ஹனிமூனிஷ் (Honeymoonish) ஒரிஜினல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. அரபு மொழியில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் காமெடி மற்றும் ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

விருப்பமே இல்லாமல் அவசர அவசரமாக திருமணம் செய்யும் ஜோடி ஹனிமூனுக்கு செல்லும் இடத்தில் அரங்கேறும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை. முதலிரவை எப்படியாவது தள்ளிப் போட வேண்டும் என திட்டமிடும் மணப்பெண்ணுக்கும் முதலிரவில் ஜமாய்த்து விட வேண்டும் என நினைக்கும் மணமகனுக்கும் இடையே திடீரென தெரிய வரும் ஒரு விஷயம் அவர்கள் திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது.

review honeymoonish

அதன் பின்னர் என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? அல்லது பிரிந்தார்களா என்பதை காமெடி கலந்த படமாக இயக்குநர் எல்லி செமானான் இயக்கியுள்ளார்.

ஹனிமூனிஷ் கதை: வெறும் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் அரபு படமாக இந்த ஹனிமூனிஷ் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. ஹமாத் (முகமது பஷாரி), நூர்(நூர் அல் காந்தர்) என்பவரை திருமணம் செய்துக் கொள்கிறார். திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும் நூரின் அழகை பார்த்து மயங்குகிறார் ஹமாத். ஆனால், விருப்பமின்றி ஹமாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் நூர் ஹனிமூனுக்கு அவருடன் சென்றாலும் தங்களுக்குள் உடலுறவு நடக்காமல் தடுக்க அனைத்து வழிகளையும் செய்ய முயற்சிக்கிறார். அதே சமயம் ஹமாத்தின் அத்தை போன் செய்து நூர் உன்னுடைய சகோதரி என்றதும் ஹமாதின் ஆசையெல்லாம் சுக்கு நூறாக உடைகிறது. உடனடியாக விவாகரத்து செய்து விடுகிறேன் என மனம் மாறுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

review honeymoonish

படம் எப்படி இருக்கு?: குவைத் நாட்டில் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்களா என்கிற ஆச்சர்யத்தை படம் கொடுக்கிறது. ஹாலிவுட் படம் அளவுக்கு இந்த படத்தின் மேக்கிங்கை தரமாகவே உருவாக்கியுள்ளனர். லீடு ரோலில் நூர் மற்றும் ஹமாத் கதாபாத்திரத்தில் நடித்த இருவரது நடிப்பும் சிறப்பு. கடைசி வரை காமெடி கலந்த ஹனிமூன் கதையாகவே படம் நகர்கிறது.

தாய்ப்பால் குடித்தாலே தங்கையா?: நூர் மற்றும் ஹமாத் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் முன் பின் தெரியாது. திடீரென இருவரும் சகோதரர்கள் என்று அத்தை சொல்ல காரணமே மருத்துவமனையில் நூர் மற்றும் ஹமாத் இருவரும் ஒரு பெண்ணிடத்தில் தாய்ப்பால் குடித்த நிலையில் இருவரும் சகோதரர்கள் ஆகின்றனர் என்பது தான் கதையில் இடம்பெற்ற ட்விஸ்ட். கடைசியில் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்கிற கதையுடன் இந்த ஹனிமூனிஷ் படம் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களை தாண்டி சர்வதேச திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த ஹனிமூனிஷ் படத்தை ஒருமுறை முயற்சி செய்யலாம்.

review honeymoonish

முத்தக்காட்சி கூட இல்லை: ஹனிமூனிஷ் என்றதுமே ஹனிமூன் போட்டோகிராபர் இந்தி வெப்சீரிஸ் போல கசமுசா காட்சிகளுடன் கதை நகரும் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. டைட்டிலை தாண்டி படத்தில் ஒரு இடத்தில் கூட முத்தக் காட்சி கூட இல்லை. கணவன் நெருங்கி வரும் போது மனைவி எப்படியெல்லாம் தவிர்க்கிறார். அதன் பின்னர் காலை முதல் மாலை வரை மலையேற்றம், சர்ஃபிங், காயகிங் என எல்லாவற்றிலும் எப்படி கலக்குகிறார். இருவருக்கும் இடையே காதல் எப்படி மலர்கிறது என பல சூப்பரான காட்சிகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X