தங்கச்சியை கல்யாணம் பண்ணக் கூடாதா?.. ஹாட் ஸ்பாட் ரியல் கிளைமேக்ஸ்.. டிரெண்டாகும் டெலிட்டட் சீன்!
சென்னை: விக்னேஷ் கார்த்திக் இயக்கி நடித்த ஹாட்ஸ்பாட் திரைப்படம் அதன் டிரைலர் கட் காரணமாகவே தியேட்டருக்கு ரசிகர்களை வரவிடாமல் செய்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.
படம் நல்லா இல்லை என்றால் 'செருப்பால் அடியுங்கள்' என படம் பார்க்க யாருமே தியேட்டருக்கு வராத நிலையில் விக்னேஷ் கார்த்திக் புலம்பித் தவித்தார். ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு தற்போது புரோமோஷன் மிகப்பெரிய பலமாக உள்ளது.

சரியாக படத்தை பிரமோட் செய்யவில்லை என்றால் நல்ல படம் கூட ரசிகர்களை சென்று சேராது என்பதற்கு உதாரணமாகவே இந்த ஹாட்ஸ்பாட் திரைப்படம் மாறிவிட்டது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சமுதாயத்தில் கொட்டிக் கிடக்கும் பல மூடநம்பிக்கைகளை உடைக்கும் விதமாக 4 கதைகளை நறுக்கென பல அடல்ட் விஷயங்களை வைத்து இயக்கி இருந்தார் விக்னேஷ் கார்த்திக்.
எல்லாமே வில்லங்கம்: ஆணுக்கு பெண் தாலி கட்டுவது, ஆண்கள் செய்யும் விபச்சாரம், அண்ணன் தங்கச்சி திருமணம் மற்றும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என நான்கு விஷயங்களை ஒவ்வொரு கதையாக வைத்துக்கொண்டு ஹாட்ஸ்பாட் படத்தை கொடுத்திருந்தால் விக்னேஷ் கார்த்திக்.
என்ன பிரச்சனை: வெறும் டிரைலர் மட்டுமே இந்த படத்தின் ஓட்டத்துக்கு தடையாக அமைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி படத்தில் முக்கிய நடிகர்களை தாண்டி பல துணை நடிகர்களை காஸ்ட் செய்த விதம் மற்றும் எடிட்டிங் சொதப்பல் என ஏகப்பட்ட பிரச்சனை தான் இந்த படத்தின் உண்மையான வில்லன் என விமர்சகர்கள் கூறினர்.
ஓடிடியில் ஓடுது: ஓடிடியில் பல அடல்ட் ஒன்லி படங்களை பார்த்து பழகிப் போன ரசிகர்கள் இந்த படத்தையும் தற்போது பார்த்து விட்டு இதை தியேட்டரில் பார்க்க தவறி விட்டோமே என கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கு எதிராக சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்கள் எனும் பெயரில் கொடுமைப்படுத்துவதாக கூறும் இடங்கள் என கதை வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் விதமாகவும் உள்ள நிலையில் ஓடிடியில் ஹாட்ஸ்பாட் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
டெலிட்டட் கிளைமேக்ஸ்: சாண்டி மற்றும் அம்மு அபிராமி நடித்த கதைக்கு எந்தவொரு முடிவும் இல்லாமல் படத்தில் முடித்திருப்பார்கள். ஆனால், படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸே இருவரும் சேர்வது போலத்தான் எடுத்தோம் என தற்போது அந்த டெலிட்டட் கிளைமேக்ஸை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெரியம்மா பையன் என்றே தெரியாமல் சாண்டியை அம்மு அபிராமி காதலிக்க கடைசியில் இருவரும் சேர காரணமாக இஸ்லாமிய திருமண அழைப்பிதழ் வருவதாகவும் அந்த மதத்தில் அது தவறு இல்லை என்று இருப்பதால் இருவரும் சாதி, மதம் கடந்த திருமணத்தை செய்துக் கொள்வதாக கிளைமேக்ஸை முடித்துள்ளனர். இதை படத்திலேயே வைத்திருக்கலாமே ஏன் டெலிட் பண்ணிட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். விக்னேஷ் கார்த்திக்கின் வித்தியாசமான சிந்தனையையும் படத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர். அவருடைய அடுத்த படம் நிச்சயம் தியேட்டரில் வெற்றிப் படமாக அமையும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











