Hot spot movie: ரசிகர்களை கவர்ந்த ஹாட் ஸ்பாட் படம்.. ஓடிடி ரிலீஸ் எப்பன்னு பாருங்க!

சென்னை: கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஹாட் ஸ்பாட். சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் ஆகியோர் இசையமைத்திருந்த இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது. ஆனால் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து இரு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் இந்த படம் கடந்த மே மாதம் 3ம் தேதியே ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி இந்த படம் வெளியாகாத சூழலில் தற்போது மே மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Hot spot movie to be streaming in OTT on May 17th

ஹாட் ஸ்பாட் படம்: நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஹாட் ஸ்பாட் படம். 11 படங்களில் ஒன்றாக இந்தப் படம் வெளியான சூழலில் இந்த படத்திற்கு இது மிகப்பெரிய பிரஷரை கொடுத்ததாக படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். முன்னதாக திட்டம் இரண்டு மற்றும் அடியே படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற சூழலில் ஒரு கட்டத்தில் ரசிகர்களை கவர்ந்து இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது.

படக்குழு தேங்க்ஸ் மீட்: முன்னதாக போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் மற்றும் ரசிகர்கள் ஆதரவு இல்லாத சூழலில் இந்தப் படம் வசூலில் திணறியது. மலையாள படங்களுக்கு ஆதரவு தரும் ரசிகர்கள், தமிழில் எடுக்கப்படும் நல்ல படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று விக்னேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். படத்திற்கு சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கு படக்குழுவினர் தேங்க்ஸ் மீட் மூலம் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

ஓடிடியில் வெளியீடு: இது போன்ற சிறிய படங்களுக்கு நல்ல ஆதரவை தந்தால் தங்களைப் போன்ற நிறைய இயக்குனர்கள் நல்ல படங்களை எடுக்க முன் வருவார்கள் என்று விக்னேஷ் கார்த்திக் மேலும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதிலும் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் கடந்த மே மாதம் 3ம் தேதியே ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படம் அறிவிக்கப்பட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் மே மாதம் 17ம் தேதி படம் ஆஹா ஓடிடி தளம் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்: கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்றது. ஆனால் படம் வெளியான பிறகு, படத்தின் நெகட்டிவிட்டி அனைத்தும் பாசிட்டிவிட்டியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள். சமூகம் பேச தயங்கும் பல விஷயங்களை மிக தைரியமாக மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில் இந்த படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. படத்தின் ஓடிடி ரிலீசிற்காக ரசிகர்கள் காத்திருந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு முன்னணி ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X