Hot spot: ஆண் -பெண் உறவை மையப்படுத்திய ஹாட் ஸ்பாட் படம்.. ஓடிடியில் எப்ப ரிலீஸ் தெரியுமா?

சென்னை: இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி வெளியான படம் ஹாட்ஸ்பாட். முன்னதாக திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் இயக்கத்தில் உருவாகியிருந்தது ஹாட் ஸ்பாட். ஆண் பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றிருந்தது ஹாட் ஸ்பாட். ஆனால் போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் மற்றும் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுக்காததால் படம் வசூலில் திணறியது. இந்நிலையில் இந்தப் படம் அடுத்ததாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hot spot movie will be streaming from May 3rd in Tentkotta OTT

ஹாட் ஸ்பாட் படம்: நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஹாட் ஸ்பாட். இந்தப் படத்தை திட்டம் இரண்டு, மற்றும் அடியே படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருந்தார். ஆண் -பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக இந்தப் படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருந்தது.

விமர்சனரீதியான பாராட்டு: ஆனால் போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இல்லாத சூழலில் இந்தப் படம் வசூலில் திணறியது. படம் ரிலீசான சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், படம் பார்த்தவர்கள் நன்றாக ரசித்துப் பார்த்தனர் என்று தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்றும் மலையாள படங்களுக்கு அவ்வளவு ஆதரவு தருகிறீர்கள் நாங்கள் உண்மையிலேயே நல்ல படம் எடுத்திருக்கிறோம், நம்பிக்கையுடன் சொல்கிறேன் இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள் என்று அவர் தன்னுடைய வேதனையை பகிர்ந்து இருந்தார்.

படம் சந்தித்த பிரஷர்: படத்துக்கு சதீஷ் ரகுநாதன், வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியான சூழலில் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு சக்சஸ் மீட் நடத்தப்படவில்லை. ஆனால் தேங்க்ஸ் மீட்டை படக்குழுவினர் நடத்தினர். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட காரணமாக அமைந்த பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். 11 படங்களில் ஒரு படமாக கடந்த மார்ச் 29ம் தேதி படம் வெளியான சூழலில் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிரஷரை தந்ததாக அவர் குறிப்பிட்டனர்.

தேங்க்ஸ் மீட் நடத்திய டீம்: சில திரையரங்குகளில் ஒரு காட்சி ஒதுக்கீட்டிற்குகூட படக்குழுவினர் போராடியதாக தெரிவித்தனர். இதுபோன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவை தந்தால் தங்களைப் போன்ற நிறைய பேர் படம் எடுப்பார்கள் என்றும் இந்தப் படத்தின் நடிகர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட ஆண் பெண் உறவு குறித்து இதுவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இத்தகைய கேரக்டர்களில் நடிக்க விக்னேஷ் எப்படி படத்தின் நடிகர்களை ஒத்துக் கொள்ள வைத்தார் என்று தெரியவில்லை என்றும் இந்த தேங்க்ஸ் மீட்டில் படக்குழுவினர் பேசியது கவனத்தை ஈர்த்தது.

ஓடிடியில் ரிலீஸ்: இந்தப் படம் ஓடுவது குறித்து தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் ஆனால் படம் இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது தனக்கு நம்பிக்கையை கொடுத்ததாகவும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். மேலும் ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கான முயற்சியிலும் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வரும் மே மாதம் 3ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் 11 படங்களுக்கு மத்தியில் வெளியானபோதிலும் சிறந்த கதைகளத்தால் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஓடிடி தளத்தில் ஏராளமான ரசிகர்களால் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X