For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அரியணைக்காக அண்ணன் மகளையே ஆசை நாயகியாக்க துடிக்கும் டேமன்.. எப்படி இருக்கு House of the Dragon?

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸின் ப்ரீக்வெலாக உருவாகி உள்ள ஹவுஸ் ஆஃப் தி டிராகன் கதை மெகா சீரியல்களில் வரும் கள்ளக் காதல் கதையாகவே ரொம்ப மோசமாக மாறி வருவதாக நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.

  ராஜாங்க கதையாக பிரம்மாண்டமாக டிராகன் எல்லாம் வைத்துக் கொண்டு கதை இருக்கிறதே என்று பார்த்தால் கேம் ஆஃப் த்ரோன்ஸையே மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு எபிசோடிலும் ஆபாசக் காட்சிகள் மித மிஞ்சி கிடக்கின்றன.

  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இதுவரை வெளியான 5 எபிசோடுகளும் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளன.

  Emmy Awards 2022: விருதுகளை தட்டித் தூக்கிய ஸ்க்விட் கேம், டெட் லாஸோ மற்றும் ஒயிட் லோட்டஸ்! Emmy Awards 2022: விருதுகளை தட்டித் தூக்கிய ஸ்க்விட் கேம், டெட் லாஸோ மற்றும் ஒயிட் லோட்டஸ்!

  ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

  ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸ் உலகளவில் அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்தது. அந்த வெப்சீரிஸின் கதை அந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அதில் வரும் ஆபாசக் காட்சிகளை தாண்டி கதையின் பிரம்மாண்டத்தால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் உலகளவில் அதனை கொண்டாடினார்கள். அந்த வெப்சீரிஸ் முடிந்த நிலையில், தற்போது கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையின் ப்ரீக்வெலாக ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப்சீரிஸ் மிகவும் பிரம்மாண்டமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

  அக்‌ஷய் குமார் மாதிரியே

  அக்‌ஷய் குமார் மாதிரியே

  கிங் வைஸரிஸ் ஆக இந்த வெப்சீரிஸில் நடிகர் பேடி கான்ஸிடைன் நடித்துள்ளார். அந்த அயன் த்ரோனுக்கு சொந்தக்காரரான அவரை சுற்றித் தான் கதை நகர்கிறது. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தனது மூத்த மகளை இளவரசியாக மாற்றுகிறார். அதனால் அவரது தம்பி கோபித்துக் கொண்டு ஒரு டிராகனை எடுத்துக் கொண்டு இன்னொரு இடத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதல் மனைவியின் இறப்புக்கு காரணமாக இருக்கும் வைஸரிஸ் இரண்டாவது மனைவியாக மகளின் தோழியையே திருமணம் செய்து கொள்கிறார். அக்‌ஷய் குமார் மாதிரியே இருக்கார் என ட்ரோல்கள் பறந்தன.

  ஹீரோயினே இப்படியா

  ஹீரோயினே இப்படியா

  இளவரசியாக மாறிய ரெனேரா டார்கேரியன் தான் இந்த வெப்சீரிஸின் நாயகி போல காட்டி வருகின்றனர். முதல் சீனிலேயே டிராகனை ஓட்டி வருகிறார். இளவரசியாக ஆனாலும், அரசியாக இவர் முடி சூட முடியாது என்கிற சிக்கல் நிலவி வருகிறது. மன்னரின் ஆண் வாரிசு தான் நாட்டை ஆள வேண்டும் என்று கூறுகின்றனர். சீரியஸாக இவர் போர்ஷன் செல்லும் என்று பார்த்தால் படு மோசமாக சொந்த சித்தப்பாவிடமே காமம் கொள்ளும் காட்சிகள் அரங்கேறி ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

  அண்ணன் மகளிடம் அத்துமீறல்

  அண்ணன் மகளிடம் அத்துமீறல்

  அரியணைக்காக அண்ணன் மகள் ரெனேராவையே திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார் டேமன் டார்கேரியன். அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மேட் ஸ்மித் காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார். ரகசியமாக ஊருக்குள் அண்ணன் மகளை அழைத்துச் செல்லும் அவர் ரெட் லைட் ஏரியாவுக்குள் நிர்வாணமாக பலரும் உடலுறவு கொள்வதை காட்டி ஆசை தீயை மூட்டி அத்துமீறும் காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

  பாடிகார்ட் உடன்

  பாடிகார்ட் உடன்

  ரெனேராவாக நடித்துள்ள நடிகை மில்லி ஆல்காக் டேமனின் இச்சைக்கு அடிபணிய முயற்சிக்க ஆசையை தூண்டிவிட்டு எதுவும் செய்யாமல் அங்கேயே அவரை விட்டுச் செல்கிறார். பயங்கர அப்செட்டில் தனது அறைக்கு வரும் ரேனேரா பாடிகார்டை உள்ளே அழைத்து இன்பமாக இருக்கும் காட்சிகள் மேலும், அந்த கதாபாத்திரத்தின் மேல் ஈர்ப்பு வராமல் வெறுப்பை வர வழைக்கின்றன. அவருடனும் காதல் இல்லை, அப்பா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என ரெனேரா கூறும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் காண்டாகி டிவியிலேயே அவரை அடிக்கச் செல்கின்றனர்.

  மாப்பிள்ளை ஓரினச்சேர்க்கையாளர்

  மாப்பிள்ளை ஓரினச்சேர்க்கையாளர்

  இங்கே இப்படி இஷ்டத்துக்கும் கள்ளக்காதல் பிரச்சனை தலைவிரித்து ஆட, ரெனேராவை நட்பு நாட்டு அரசர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அரசர் முடிவு செய்கிறார். ஆனால், அந்த மாப்பிள்ளை தனது ஆண் நண்பருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் காட்சிகள் மேலும், ரசிகர்களை கடுப்பாக்குகிறது. திருமண நிச்சயதார்த்த விழாவிலேயே மாப்பிள்ளையின் ஆண் காதலரை கடுப்பில் இருக்கும் அந்த பாடிகார்ட் போட்டுத் தள்ளுகிறார். இதுவரை வெளியான 5 எபிசோடுகளில் இத்தனை அக்கப் போர். கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல பல ஆண்டுகள் இந்த வெப்சீரிஸ் ஓடுமா என்பது சந்தேகம் தான்.

  English summary
  House of the Dragon contains many adult content story upsets fans. They trolled the makers for their obscene story and screenplay only revolves around adult contents. Game of Thrones prequel House of the Dragon streaming on Disney plus Hotstar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X