ஏகானைக் கொல்ல திட்டமிடும் ரெனேரியா! எப்படி இருக்கு ஹவுஸ் ஆஃப் த டிராகன் 2வது சீசன் முதல் எபிசோட்?

நியூயார்க்: உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட வெப் சீரிஸ்களில் கேம் ஆஃப் தி த்ரோன்ஸ் வெப் சீரிஸும் ஒன்று. மொத்தம் 8 சீசன்களாக வெளியான இந்த வெப் சீரிஸில் மட்டும் மொத்தம் 73 எபிசோட்கள் இடம் பெற்றது. இந்த 8 சீசனையும் மொத்தம் 18 இயக்குநர்கள் இணைந்து பலவேறு காலகட்டங்களில் இயக்கி வெளியிட்டனர்.

ஒவ்வொரு எபிசோட்களும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது. அதன் அடிப்படையில் 3 மணி நேரங்கள் இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட வெப் சீரிஸாக இது இருந்தாலும் இந்த வெப் சீரிஸ் மீது ரசிகர்களுக்கு குறையவில்லை. கடைசி எபிசோடில் மேட் கிங்கின் மகள் கிங்ஸ் லேண்டிங்கை முற்றிலுமாக துவம்சம் செய்வது எல்லாம் அட்டகாசமான காட்சிகளாக மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டது.

House Of The Dragon Jio Cinema OTT GOT House Of The Dragon Season 2 House Of The Dragon Review

இந்த வெப் சீரிஸ் குழு இதற்கு முந்தைய காலகட்டம் எனக் கூறி மேட் கிங் எப்படி உருவாகின்றான் என்பதை விளக்கும் விதமாகவும் டர்கேரியன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதையும் விளக்கும் விதமாக "ஹவுஸ் ஆஃப் த ட்ராகன்" என்ற வெப் சீரிஸை அறிமுகம் செய்தது. இதன் முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேம் ஆஃப் த த்ரோன்ஸ் நடப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கதைதான் ஹவுஸ் ஆஃப் த டிராகன் கதை காட்டப்பட்டுள்ளது. .

House Of The Dragon Jio Cinema OTT GOT House Of The Dragon Season 2 House Of The Dragon Review

ஹவுஸ் ஆஃப் த டிராகன்: முழுக்க முழுக்க கற்பனைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கதைக்களத்தில் லட்சக்கணக்கான நடிகர்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹவுஸ் ஆஃப் த டிராகன் வெப் சீரிஸின் இரண்டாவது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ளது. இதற்கு A Son For a Son என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனை ஆலன் டைலர் இயக்கியுள்ளார்.

House Of The Dragon Jio Cinema OTT GOT House Of The Dragon Season 2 House Of The Dragon Review

எப்படி இருக்கு?: கிட்டத்தட்ட 53 நிமிடங்கள் இடம் பெற்றுள்ள இந்த எப்பிசோடில் கிங்ஸ் லேண்டிங்கும் ரெனேரியாவும் டீமனும் உள்ள டிராகன் ஸ்டோனும் மாற்றி மாற்றி காட்டப்படுகின்றது. தனது மகனை இழந்த ரெனேரியா ஏலிசண்ட் மகன் ஏகானைக் கொல்ல வேண்டும் என்பதற்காக அவன் வேண்டும் என்கின்றார். இதற்காக டீமன் இருவரை ரகசியமாக அனுப்பி ஏகானை கடத்தி வரும்படி அனுப்புகின்றார். இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள் என்பது ஒரு லேயராக கதை நகர்கின்றது. இதற்கிடையில் தனது மகனின் மறைவை நினைத்து ரெனிரியா வருந்துவதும் மகனைக் காக்க ஆலிசண்ட் யோசிப்பதும் என கதை சிறப்பாகவே நகர்கின்றது.

முதல் எபிசோடில் இருந்தே டிராகன் சண்டைகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த எபிசோட் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், முதல் எபிசோட் தரமாகவே எடுக்கப்பட்டுள்ளது. முதல் எபிசோடின் கடைசி ஷாட் பிரமாதமாக இருப்பதால் அடுத்த எபிசோடு மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X