twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெல்லி கணேஷ் எனும் அசுரனை வைத்து ... இயக்குனர் வசந்த் எப்படி வெற்றி பெற்றார்?

    |

    சென்னை : Netflixல் வந்திருக்கும் நவரசா seriesஸை முழுதுவதுமாக பார்த்தவர்கள் வெகுசிலர். கஷ்டப்பட்டு ஒருவழியாக அதைப் பார்த்தவர்கள் சிலர் பாராட்டியும் வருகிறார்கள் , பலர் கழுவியும் ஊற்றுகிறார்கள்.

    Recommended Video

    அந்த இரண்டு நடிகர்கள் - Vera Level | Director Vasanth | Navarasa | Filmibeat Tamil

    Netflix அதைத் தயாரித்த காரணமே தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காகத்தான். மணிரத்னத்திடம் அந்த 'வியாபாரம்' ஒப்படைக்கப்பட்டது என்று பல சீனியர் சினிமா பட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகிறது.

    கடைசியில் இப்படி ஆயிடுச்சே.... சந்தானத்தின் அந்த படமும் ஒடிடியில் ரிலீசா! கடைசியில் இப்படி ஆயிடுச்சே.... சந்தானத்தின் அந்த படமும் ஒடிடியில் ரிலீசா!

    நெட்டிசன்ஸ் பலர் நெட்பிளிக்ஸ் மற்றும் மணிரத்தினம் குழுவை விதவிதமான கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறார்கள் . சிலர் பல வகை மீம்ஸ் போட்டு தள்ளுகின்றனர் . அப்படி பட்ட பல ரசிகர்கள் மற்றும் சினிமா வல்லுநர்கள் கூறிய சில கருத்துக்களை இங்கே காண்போம் .

    குறும்படங்களை

    குறும்படங்களை

    மணிரத்னம் நவரசா என்ற பெயரில் ஒரு தமிழ் Anthologyயை துவக்கிவிட்டார். ஒன்பது குறும்படங்களும் ஒவ்வொரு 'ரசா'வாம். கருணா, அத்புதா, கருமாந்திரா என ஏதேதோ பெயர்களில் 'தமிழ்'(?) குறும்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்தியை தமிழில் டப்பிங் செய்து Netflix வெளியிடும் படங்களில்கூட அதிகமாகத் தமிழ் இருக்கிறது எனும்போது, "வாங்க தமிழ்நாட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறோம்," என வாக்குறுதி கொடுத்து அநியாயமாக Netflixஸை ஏமாற்றியிருக்கிறார்கள் மணிரத்னமும் அவர் குழுவும் என்று இணையதள வாசிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

    ஜானகிராமனின் சிறுகதை

    ஜானகிராமனின் சிறுகதை

    அதேநேரம் அதில் பங்குபெற்றிருக்கும் படங்களில் சில , 'Social media மார்கெட்டிங்கிற்கு நன்றாகச் செலவழிக்கும்' சில இயக்குனர்களின் படங்கள். பலனடைந்த சிலரால் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன. பார்த்தவரையில் 'பாயாசம்' என்கிற படம் மட்டுமே சிலருக்கு பிடித்திருந்தது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது . மற்ற படங்களில் பரவிக் கிடந்த அமெச்சூர்தனமும், அதிகப்பிரசங்கித்தனமும், "நான் பெரிய புத்திசாலி" என்கிற அந்நியமான ஆணவமும் இல்லாமல் ஒரு நல்ல படமாக பாயாசம் மட்டுமே இருந்தது. அதற்குக் காரணம் பாயாசம் படத்தின் கதை . தி.ஜானகிராமனின் சிறுகதை. இயக்கியிருப்பது இயக்குனர் வசந்த்.

    அப்பாவை பார்க்கும் பார்வை

    அப்பாவை பார்க்கும் பார்வை

    60களின் சூழ்நிலையை மையமாக கொண்டு ஒரு குடும்பத்தில் கதை நடக்கிறது. தன் அண்ணனின் மகன் மீது கடும் பொறாமையில் இருக்கும் டெல்லி கணேஷ் கதாப்பாத்திரம்தான் கதையின் மையம். தன் மகள் இளவயது கைம்பெண். ஆனால் அண்ணன் மகனின் ஏழு பெண்களும் நன்றாக வாழ்கிறார்கள். அண்ணன் மகனும் நன்றாக வசதியாக மரியாதையுடன் வாழ்கிறார். இது டெல்லி கணேஷை பாடாய்ப்படுத்துகிறது. எக்காலமும் வன்மத்தால் புலம்ப வைக்கிறது. டெல்லி கணேஷின் இறந்துபோன மனைவி (ரோகிணி) ஒரு கற்பனைக் கதாப்பாத்திரமாக வந்து டெல்லி கணேஷுடன் பேசிக்கொண்டே இருக்கிறார். உரையாடல்களும் யதார்த்தமாக, இயல்பை மீறாமல் இருந்தன. சில இடங்களில் மிக நன்றாகவே இருந்தது என்றும் . குறிப்பாக டெல்லி கணேஷ் ஒரு விருந்தினருடன் பேசும் காட்சி அட்டகாசம். அதிதி பாலன் கடைசி காட்சியில் தன் அப்பாவை பார்க்கும் பார்வையில் கலக்கிவிட்டார் என்றும் பாராட்டி வருகின்றனர் பக்குவப்பட்ட சில சினிமா ரசனையாளர்கள் .

    அதனாலேயே ஜெயித்தும்விட்டார்

    அதனாலேயே ஜெயித்தும்விட்டார்

    இந்தப் படத்துக்கும் மற்றதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. மற்ற குறும்படங்களில் எல்லாம் தானே கதை எழுதுகிறேன் என்றும் மணிரத்னம் கதையை இயக்குகிறேன் என்றும், யாருமே பார்க்க முடியாத அளவுக்குப் படங்களை எடுத்தும் கெடுத்தும் வைத்திருக்கிறார்கள் என்று பல இளைஞர்களும் சினிமா வல்லுனர்களும் கூறி வருகிறார்கள் . ஆனால் வசந்த் அழகாக தி.ஜானகிராமனின் பழைய சிறுகதையை எடுத்து இயக்கியது பாராட்டுக்குரியது. அதனாலேயே ஜெயித்தும்விட்டார் என்று பலரால் சொல்ல படுகிறது .

    ரசிகர்களையும் படுத்துகிறது

    ரசிகர்களையும் படுத்துகிறது

    பொதுவாகவே கதையை இயக்குனர்கள் எழுத வேண்டிய தேவை இல்லை. கதைக்கும் இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை. நம்மூர் பாரதிராஜாவில் இருந்து ஸ்பீல்பெர்க் வரை, கேரள, ஆந்திர திரையுலகம் வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஆனால் நம்மூர் இயக்குனர்களுக்கு, இயக்குனர் என்றாலே அவர்களுக்குள் ஒரு செமையான எழுத்தாளன் இருப்பான் என்கிற மூடநம்பிக்கை ஆழ்மனதில் உட்கார்ந்துகொண்டு ஆட்டிவைக்கிறது. அது ரசிகர்களையும் போட்டுப் படுத்துகிறது. நவரசாவில், வசந்த் கையாண்ட அருவெறுப்பு என்கிற ஒரு உணர்வைத் தவிர மற்ற எல்லாமே நாசமாய்ப் போனதுக்கு இதுதான் முக்கிய காரணம் என்று பல கதாசிரியர்கள் சொல்லிய வண்ணம் உள்ளனர் .

    நாசூக்காக பேசுவார்கள்

    நாசூக்காக பேசுவார்கள்

    இந்தியாவின் பெரும் பிரச்சனையாக இட ஒதுக்கீட்டால்தான் திறமை போச்சு, தகுதி போச்சு என பலர் குதிப்பார்கள் - என்பதை பல மேடைகளில் பலர் பதிவு செய்து உள்ளனர் . ஆனால் அவர்கள் காலம்காலமாக தங்களையும், தங்களுக்கு வேண்டியவர்களையும் தூக்கிவிடப் பயன்படுத்தும் 'லாபி' என்கிற விஷயத்தைப் பற்றி சிலர் மற்றும் நாசூக்காக பேசுவார்கள். சிலர் பேசாமல் செய்து காட்டுவார்கள் என்று சில சம்பவங்கள் புரிய வைப்பவதாக சொல்ல படுகிறது .

    பெரிய காரணம்

    பெரிய காரணம்

    வெற்றிமாறன், பார்த்திபன் போன்ற பெரிய இயக்குனர்கள் அமர்ந்துபேசும் இயக்குனர்களுக்கான ஒரு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எளிதில் இடம் கிடைத்துவிடும். எண்ணற்ற திறமையான இயக்குனர்கள் இருக்க, சுஹாசினியால் அமேசானிலோ நெட்ஃபிளிக்ஸிலோ எளிதில் படம் இயக்கிவிட முடியும். நல்ல கண்டண்ட் என்பது தமிழ் OTT உலகில் அரிதிலும் அரிதாக வருவதற்கு இது ஒரு பெரிய காரணம் என்று பல இணை துணை இயகுனர்கள், மற்றும் முன்னேற துடிக்கும் எழுத்தாளர்கள் புலம்பி வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் பேச தொடங்கி விட்டனர் .

    மனதார பாராட்டினால்

    மனதார பாராட்டினால்

    நவரசாவையே எடுத்துக்கொண்டால் . அதில் அக்னி எனும் குறும்படத்தின் (99% ஆங்கில வசனங்கள் உள்ள குறும்படம் அது) தமிழ் subtitleலில் "போறச்சே வாரச்சே" என பாஷை வருகிறது. இதுதான் லாபியின் பவர். இந்தியத் துறைகளில் இது இல்லாத இடமில்லை. இதில் இன்னொரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் சமூக ஊடகங்களில் மிகக் குறைவாக பேசப்படும் படம் வசந்தின் 'பாயாசம்'. அது ஒன்றுதான் உருப்படியான குறும்படம் என்றாலும் அதைப் பற்றிப் பேச ஆள் இல்லை. இதுதான் இன்றைய நிதர்சனம் என்றும் கம்மெண்ட்ஸ் வந்துகொண்டு இருக்கிறது . திறமை இருந்தால் மட்டும் போதாது, ஏதோ ஒரு வகையான எல்லாவற்றுக்கும் லாபி தேவைப்படுகிறது. இல்லாதவர்களுக்கு யாராச்சும் மனதார பாராட்டினால் தான் உண்டு. முடிந்தால் பாயாசம் குறும்படத்தை பார்த்து மற்ற படங்களோடு கம்பேர் செய்யுங்கள், அல்லது கம்பேர் செய்யாமல் பாயசத்தை பருகுங்கள் என்று இயக்குனர் வசந்திக்கும் ஜானகி ராமனின் கதைக்கும் நிறைய ஆதரவு குரல் வலுத்து வருகிறது.

    English summary
    Navarasa anthology is getting mixed response from the fans and Payasam movie is one among the movie, in which Delhi Ganesh has given his best action.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X