Fighter OTT: ஃபைட்டர் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ஃபைட்டர் திரைப்படம் 2 மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாக போகிறது. இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது.
50 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷன் இந்த வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து மிரட்டியுள்ளார். பதான், ஜவான் படங்களை தொடர்ந்து தீபிகா படுகோன் நடித்த பிரம்மாண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைட்டர் ரிலீஸ்: வார், பதான் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இந்த ஆண்டு வெளியான படம் தான் ஃபைட்டர். கடந்த ஆண்டு ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி பாலிவுட்டையே பாக்ஸ் ஆபிஸில் தலைநிமிரச் செய்தது. இந்நிலையில், அதே போன்ற வெற்றியை ஃபைட்டர் கொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் ஜனவரி 25ம் தேதி வெளியானது.
சொதப்பிய ஃபைட்டர்: பீஸ்ட் படம் மாதிரி இருக்காது என்றும் டாம் க்ரூஸின் டாப் கன் மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூலை தாண்டவே திணறிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் எடுத்து படுத்து விட்டதே என்கிற கோபம் சித்தார்த் ஆனந்துக்கு ஏற்பட்டது. இந்திய ரசிகர்கள் ஏர் ஃபோர்ஸ் பற்றி அதிகம் அறியாததால் தான் இந்த படம் ஓடவில்லை என சித்தார்த் ஆனந்த் பேசியது ட்ரோல் மெட்டீரியல் ஆனது.
ஓடிடி ரிலீஸ்: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகிறது. அதன் அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இந்தி படங்கள் இரண்டு மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைப் நடித்த மெரி கிறிஸ்துமஸ் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி 8 வாரங்கள் கடந்த நிலையில், மார்ச் 20 நள்ளிரவு 12:00 மணிக்கு ஓடிடியில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











