பேட்டைக்காளி, கணம் படங்களை பார்க்க ரெடியா.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சென்னை : ஒவ்வொரு வாரமும் சிறப்பான பல படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இந்த வாரமும் ஓடிடியில் நேரடியாகவும் திரையரங்க ரிலீசுக்கு பின்பும் பல படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த வாரம் தமிழில் இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இவற்றிற்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான படங்களை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். நேரடியாக திரையரங்குகளில் பார்க்க முடியாத பல படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள இந்த ஓடிடி தளங்கள் உதவி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வார ஓடிடி ரிலீஸ்

அந்த வகையில் இந்த வாரம் தீபாவளியையொட்டி பல மொழிப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன. தமிழிலும் பேட்டைக்காளி மற்றும் கணம் படங்கள் இந்த வார ஓடிடியில் வெளியாகவுள்ளன. இதில் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி படம் நாளைய தினம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பேட்டைக்காளி படம்

பேட்டைக்காளி படம்

இந்தப் படத்தில் கலையரசன், ஷீலா குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படம் விரைவில் உருவாகவுள்ள நிலையில், அவரது தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்தப் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே உருவாகியுள்ளது. இந்தப் படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது.

அமலா நடிப்பில் கணம் படம்

அமலா நடிப்பில் கணம் படம்

இதையடுத்து நாளைய தினம் தமிழ் மற்றும் தெலுங்கில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற கணம் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் நாளைய தினம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகை அமலா நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான மைக் படம்

சிறப்பான மைக் படம்

இதையடுத்து மலையாளத்தில் மைக் படம் நாளைய தினம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஐஎம்டிபியில் 9.2 புள்ளிகளை பெற்றுள்ளது. சினி ஆப்ரஹாம், டயானா ஹமீது, ஜினு ஜோசப் போன்றவர்கள் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

தெலுங்கில் பிம்பிசாரா

தெலுங்கில் பிம்பிசாரா

தெலுங்கில் வசூலை குவித்த பிம்பிசாரா படமும் நாளைய தினம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. இதனிடையே தெலுங்கில் ரொமாண்டிக் ஜானரில் உருவான கிருஷ்ண விருந்த விஹாரி படம் நாளைய தினம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இதேபோல கபட நாடக சூத்திரதாரி என்ற படமும் நாளைய தினம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரவேற்பை பெற்றுள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படமும் நாளைய தினம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதேபோல பாலிவுட்டில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற பிரம்மாஸ்திரா படமும் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

 தி டிரிப்ளிங்ஸ் வெப் தொடர்

தி டிரிப்ளிங்ஸ் வெப் தொடர்

பாலிவுட்டில் தி டிரிப்ளிங்ஸ் என்ற இணையதொடரின் 3வது சீசன் நாளைய தினம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வாரம் தீபாவளியையொட்டி சிறப்பான பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே ஓடிடியிலும் பல படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான விஷயமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X