அமேசான் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் ட்ரீட் பிருத்விராஜின் கடுவா: லிஸ்ட்ல இன்னும் கொஞ்சம் இருக்கு
சென்னை: திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் இப்போது உடனுக்குடன் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
சில படங்களும் வெப் சீரிஸ்களும் நேரடியாகவே ஓடிடிகளில் வெளியிடப்படுகின்றன.
இந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ.

பிருத்விராஜின் கடுவா
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள 'கடுவா' திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் ஜானரில் கமர்சியலாக உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இப்படம் தற்போது அமேசானில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.

All or Nothing: Arsenal
ஸ்போர்ட்ஸ் டாக்குமெண்ட்ரியாக உருவாகியுள்ள இது, 2021/22 கால்பந்து போட்டியின் பின்னணியில் உருவாகியுள்ளது. Pierre-Emerick Aubameyang இன் எதிர்பாராத வெளியேற்றம் முதல் அர்செனல் கால்பந்து கிளப்பின் முக்கியமான அனைத்தையும் ஆராய்கிறது. இது ஸ்போர்ட்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thirteen Lives
நாளை வெளியாகும் இப்படம், 2018ம் ஆண்டு தாய்லாந்தில் எதிர்பாராத கனமழை காரணமாக இளம் கால்பந்து அணியினர், அவரது பயிற்சியாளருடன் குகையில் 18 நாட்கள் சிக்கியிருந்தனர். பின்னர் அவர்களில் ஒரு சிறுவனை தவிர அனைவரும் மீட்கப்பட்டனர். அதனை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது 'Thirteen Lives.'

Crash Course
இரண்டு பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான பகையால், அங்கு போட்டித் தேர்வுகளுக்காக படித்துவரும் எட்டு மாணவர்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பின்னணி்யாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த சீரிஸ். இந்தியில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் நாளை அமேசானில் வெளியாகிறது. இந்த சீரிஸில் வரும் நிகில், சத்யா, ராகேஷ் ஆகியோரின் கேரக்டர்கள், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதியின் டி பிளாக்
இதனிடையே அருள்நிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'டி பிளாக்' படம், இந்த வாரம் அமேசானில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படத்திற்கு வரவெற்பு கிடைக்கவில்லை என்றாலும், அமேசானில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல யூடியூபரான 'எரும சாணி' விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











