தியேட்டரில் சொதப்பிய இந்தியன் 2?.. ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டம்?.. எப்போ தெரியுமா?

சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்த சூழலில் படமானது பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கமல் ஹாசன் இடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால் உலக நாயகன் எதிர்பார்த்தபடி அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரும் அவர், மீண்டும் சினிமாவை கவனிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தனது ரீ எண்ட்ரியை தரமாக கொடுத்தார் அவர்.

OTT Indian 2 Kamal Haasan 2

இந்தியன் 2: படம் மெகா ஹிட்டானதை அடுத்து; நின்றுபோன இந்தியன் 2 படத்தின் பணிகளும் தூசு தட்டப்பட்டன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் இந்தியன் 2 ஷூட்டிங் நின்று போயிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். ஷங்கரும் முழுமூச்சாக இறங்கி வேலை செய்தார். இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படம் ரிலீஸ்: இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு கடந்த 12ஆம் தேதி ரிலீஸான படத்தை ரசிகர்கள் பார்க்க சென்றனர். படத்தின் முதல் காட்சியிலிருந்தே இந்தியன் 2வுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே பெரும்பாலும் கிடைத்தன. பேசாமல் இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்று ஓபனாக பேச ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

20 நிமிடங்கள் கட்: அதிலும் ஷங்கர் இந்தப் படத்திலும் தனது வழக்கமான டெம்ப்ளேட்டைதான் பயன்படுத்தியிருக்கிறார். அனிருத்தின் இசை எல்லாம் ஒன்றுமே இல்லை. முக்கியமாக தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலத்திலேயே கமல் ஹாசனுக்கு இந்தியனில் அருமையாக மேக்கப் போட்டிருந்தார்கள். இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்தும் கமலின் மேக்கப் சொதப்பிவிட்டது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இப்படி விமர்சன ரீதியாக அடி வாங்கிய இந்தியன் 2 வசூல் ரீதியாகவும் சொதப்பியிருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸ்: படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தமே 58 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தியேட்டரில் நாளுக்கு நாள் ரெஸ்பான்ஸ் குறைந்துவருவதால் இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் கமல் ரசிகர்களை உச்சக்கட்ட அப்செட் ஆக்கியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X