Indian 2 OTT: எப்புட்றா.. ஓடிடியில் வெளியான இந்தியன் 2.. மீண்டும் வச்சு விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை: இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்பு வரை அந்த படம் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்து விட்டன.

டீசர், டிரெய்லர் தான் இப்படி இருக்கும் படத்தில் நிச்சயம் ஷங்கர் மேஜிக் செய்திருப்பார் என கடைசி வரை நம்பி படத்தை போய் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி படத்தில் நடித்த அனைவரையும் படத்தை இயக்கிய ஷங்கர் உள்பட ஒருவரையும் விட்டு வைக்காமல் ட்ரோல் செய்தனர்.

Indian 2 OTT Kamal Haasan 2

படம் சொதப்பி விட்டதை முதல் காட்சி முடிந்ததுமே அலர்ட் செய்த நிலையில், பெருமளவு கூட்டம் படத்தை பார்க்க தியேட்டருக்கு அடுத்தடுத்த நாட்களில் செல்லாததால் கூட்டம் குறைந்து வசூலும் குறைந்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் இந்தியன் 2வை மீதமுள்ள நெட்டிசன்கள் பார்த்து விட்டு சோஷியல் மீடியாவில் பங்கம் பண்ணி வருகின்றனர்.

தேசிய விருது வென்ற படம்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே மிகவும் சிறப்பான படம் என்றால் அது இந்தியன் படம் தான். சிறந்த நடிகருக்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருதையும் அந்த படம் பெற்றுத் தந்தது. 70 வயது முதியவர் எப்படி நடப்பார். எப்படி சண்டை போடுவார், எப்படி பேசுவார், அவரது உடல் மொழி எப்படி இருக்கும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து ஷங்கர் செதுக்கியிருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் காலத்தில் அழியாத பாடல்களாக இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக உள்ளன. அப்படி இருந்த ஒரு படத்தை எந்தளவுக்கு ஃபர்னிச்சரை போட்டு உடைக்க முடியுமோ அந்த வேலையை ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் சேர்ந்து செய்தது தான் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஓடிடியில் இந்தியன் 2: இன்று தியேட்டரில் அந்தகன், மின்மினி, கவுண்டம்பாளையம், வீராயி மக்கள் உள்ளிட்ட 8 படங்கள் வெளியாகி உள்ளன. அதற்கு போட்டியாக ஓடிடியில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்காக கமல்ஹாசன் பிரத்யேக புரமோ வீடியோ ஒன்றிலும் நடித்து வெளியிட்டுள்ளார்.

எப்புட்றா: ப்ரீ கிளைமேக்ஸ் வரை படம் ஓரளவுக்கு பராவயில்லை ரகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், சித்தார்த்தின் அம்மா மரணத்தில் இருந்து படம் படுத்தே விட்டது என்றும் கமல்ஹாசனை பாபி சிம்ஹா பிடிப்பதும், அவர் தப்பிப்பதும் அடடா இதுவல்லவா ஷங்கர் படம் என ட்விட்டர் சந்தில் இந்தியன் 2வை மீண்டும் போட்டு பொளந்து வருகின்றனர்.

Indian 2 OTT Kamal Haasan 2

மோசமான படம்: இந்த ஆண்டின் ரொம்பவே மோசமான படம் என்றால் அது இந்தியன் 2 தான். இயக்குநர் ஷங்கர் இப்படியொரு கிரிஞ்ச் படத்தை எப்படி 2 பாகங்களாக இத்தனை கோடிகளை வீணாக்கி எடுத்தார் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Indian 2 OTT Kamal Haasan 2

ஓடிடு போயிடு: இந்த சீனிலேயே கமல்ஹாசன் ரசிகர்களை தியேட்டரை விட்டு ஓடிப் போயிடுன்னு சிக்னல் கொடுத்து இருக்காரு நம்ம இந்தியன் தாத்தா என ஒவ்வொரு காட்சிகளாக ஷேர் செய்து நெட்பிளிக்ஸ் பல கோடி கொடுத்து வாங்கிய சோலியையும் முடித்து விடும் முயற்சியில் நெட்டிசன்கள் இறங்கி விட்டனர்.

Indian 2 OTT Kamal Haasan 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X