லால் சலாமுக்கு நடந்த அதே பிரச்சனை.. இந்தியன் 2வுக்கு நடந்துடுச்சா?.. ஓடிடி ரிலீஸில் சிக்கல்?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் தியேட்டரில் வசூல் வேட்டையை நடத்தாமல் படுதோல்வியை சந்தித்தது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் அந்த படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
மொய்தீன் பாயாக எக்ஸ்டண்டட் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்து முஸ்லீம் பிரச்சனை, ஒரு ஊருக்குள் நடக்கும் கிரிக்கெட் பிரச்சனை என பல விஷயங்களை அந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுக்கி இருந்தார்.

இந்த ஆண்டு வெளியான பல படங்கள் தியேட்டரில் ஓடவில்லை என்றாலும் ஓடிடியில் விற்கப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு வெளியானது. ஆனால், அந்த வாய்ப்பு கூட லால் சலாம் படத்திற்கு கிடைக்கவில்லை. தற்போது அதே நிலைமை இந்தியன் 2வுக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உஷாரான நெட்பிளிக்ஸ்: லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க்கே தொலைந்து விட்டது என்றும் அதனால், தான் படத்தின் எடிட் மோசமாகி படம் சொதப்பியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதனால், உஷாரான நெட்பிளிக்ஸ் நிறுவனம் லால் சலாம் படத்தை வாங்க மறுத்து விட்டது. அதிக தொகைக்கு ஸ்டார் வேல்யூவை மட்டுமே வைத்து ஓடிடி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விற்பனை செய்து வரும் நிலையில், அந்த படங்களை வாங்கி வெளியிட்டால் ஓடிடியிலும் பார்க்க ஆளில்லாமல் உதை வாங்கி வரும் நிலையில், ஓடிடி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்தியன் 2 ஃபிளாப்: தியேட்டரிலேயே இந்தியன் 2 படத்தைப் பார்க்க ஆட்கள் இல்லாத நிலையில் 120 கோடி ரூபாய்க்கு முன்னதாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் அந்த படத்தை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தியேட்டர் வசூலே மொத்தமாக 150 கோடி கூட தாண்டாத நிலையில், ஓடிடியில் 120 கோடிக்கு லாபம் எப்படி வரும் என்கிற கேள்வியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் எழுப்பி உள்ளதாகவும், அதனால் ஓடிடியில் இந்தியன் 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஓடிடி ரிலீஸில் சிக்கல்: இந்த ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கே அதிக தொகை கொடுக்க முடியாது என நெட்பிளிக்ஸ் நிறுவனம் கறார் காட்டிய நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கி வெளியிட முடியாது என்றும் விலையை குறைக்க வேண்டும் என பஞ்சாயத்து நடப்பதாக கூறுகின்றனர். ஆகஸ்ட் 9ம் தேதி ஓடிடியில் இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும், சில வாரம் இழுபறி நீடிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
லைகாவுக்கு பெரும் இழப்பு: 250 கோடி பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் உருவாக்கிய நிலையில், தியேட்டர் வசூல் போதுமானதாக இல்லை. இந்நிலையில், ஓடிடி விற்பனையுடன் சேர்ந்து முதலாவது வரும் என்று பார்த்த நிலையில், அதற்கும் செக் வைத்து விட்டதே நெட்பிளிக்ஸ் நிறுவனம் என கடும் அப்செட்டில் லைகா நிறுவனம் உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











