OTT: இந்தியன் 3, நயன்தாரா படம்.. நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: இந்தியன் 2வை விட இந்தியன் 3 சூப்பராக இருக்கும் என கமல்ஹாசன் புரமோஷன் எல்லாம் இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கே முன்பாக செய்த நிலையில், இந்தியன் 2 படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் தியேட்டருக்கே வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக போகிறது என்கிற தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 3 படத்துக்கா இப்படியொரு நிலைமை என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையிலும், அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 3 ஓடிடி ரிலீஸ்?: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 3 படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 3 படத்துக்காக இதற்கு மேலும், எந்தவொரு செலவும் செய்யாமல் எடுத்த வரைக்கும் எடிட் செய்து விட்டு ஓடிடியில் விற்பனை செய்து ஓரளவுக்கு லாபத்தை பார்க்கும் முடிவுக்கே லைகா நிறுவனம் வந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சொதப்பிய இந்தியன் 2: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு படு சுமாராக உருவாக்கப்பட்ட நிலையில், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. சேனாபதியின் தந்தை கமல்ஹாசனின் கதையாக 3ம் பாகம் உருவாகி உள்ள நிலையில், அந்த படத்தை பார்க்கவும் ரசிகர்கள் தயாராக இல்லை என்பதால் தியேட்டரில் வெளியிட்டு மீண்டும் ட்ரோல் மெட்டீரியல் ஆவதை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளார்களா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தியன் 3 எப்போ ரிலீஸ்?: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இதுவரை லைகா நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படமாவது ஹிட் அடிக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
நயன்தாரா படமும் ஓடிடியில்?: இந்தியன் 3 படம் மட்டுமின்றி நடிகை நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் படமும் ஓடிடியில் சீக்கிரமே நேரடி ரிலீஸ் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு சம்மருக்கே தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்வி: லேடி சூப்பர் ஸ்டார் என நடிகை நயன்தாரா கொண்டாடப்பட்டாலும் லீடு ரோலில் அவர் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், அவரது மார்க்கெட் பயங்கரமாக அடிவாங்கியுள்ளதாகவும் தியேட்டரில் படங்களை வெளியிட்டால் பார்க்க ஆட்கள் வருவது இல்லை என்பதால், ஓடிடி ரசிகர்களை குறிவைத்தே படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











