twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணா நாயுடு எதிரொலி தான் காரணமா? ஆபாச ஓடிடி படைப்புகளுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு!

    |

    டெல்லி: கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் ஓடிடி நிறுவனங்களுக்கும் ஓடிடி படைப்புகளுக்கும் செக் வைக்கும் முடிவில் ஒன்றிய அரசு தீவிரமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, உல்லு என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஓடிடி படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஆபாச வசனங்களும் நிர்வாணக் காட்சிகளும் அரங்கேறி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.

    ஓடிடி ரிலீஸ்.. கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர் - பொறாமைப்பட்ட அமீர் ஓடிடி ரிலீஸ்.. கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர் - பொறாமைப்பட்ட அமீர்

    தியேட்டரில் சென்சார்

    தியேட்டரில் சென்சார்


    தியேட்டர்களில் ஆபாச படங்கள் திரையிட்டால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்கிற கண்டிஷன் உள்ளது. மேலும், சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் நிறுவனம் கட்டுப்பாட்டுகளை கடுமையாக விதித்துள்ளது. ஆபாச வசனங்களுக்கு மியூட் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விக்ரம் படத்தில் கமல் பேசும் ஆபாச வசனம், துணிவு படத்தில் அஜித் பேசும் ஆபாச வசனங்கள் எல்லாமே மியூட் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் ஓடிடியில் அந்த வசனங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை.

    கைபேசியில் ஆபாசம்

    கைபேசியில் ஆபாசம்

    உலக அளவில் உள்ள பல்வேறு மொழி படைப்புகளையும் கைபேசியில் காணலாம் என ஓடிடி படைப்புகள் வெளியான நிலையில், நாடுகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்காமல் ஓடிடி படைப்புகளில் அல்டிமேட் ஆபாசங்களை கைப்பேசியிலேயே இளைஞர்களுக்கு வயது வரம்பு இல்லாமல் கொடுத்து வருகின்றன.

    அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

    அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

    ஓடிடிக்கு எதிரான புகார்கள் குவிந்து வந்தாலும் உலகளவில் உள்ள பெரு நிறுவனங்களை ஒன்றிய அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிகரித்து வரும் ஓடிடி ஆபாச படைப்புகளுக்கு எதிரான எச்சரிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

    கருத்து சுதந்திரம் என்கிற பெயரில்

    கருத்து சுதந்திரம் என்கிற பெயரில்

    கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் ஆபாசம் மற்றும் மோசமான ஓடிடி படைப்புகளுக்கு எதிராக குவியும் புகார்கள் குறித்து இனியும் ஒன்றிய அரசு சும்மா இருக்காது என்றும் ஓடிடி விதிமுறைகளை மாற்றும் நிலைமை ஏற்பட்டால் அதுகுறித்த நடவடிக்கையும் கட்டாயமாக பாயும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

    ராணா நாயுடு எதிரொலி

    ராணா நாயுடு எதிரொலி

    இந்தி வெப்சீரிஸ்களை தாண்டி சமீபத்தில் தெலுங்கில் வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸ் ஏற்படுத்திய கடுமையான தாக்கம் தான் இதற்கு காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் இணைந்து நடித்து நெட்பிளிக்ஸில் வெளியான அந்த வெப்சீரிஸில் அளவுக்கு அதிகமான மோசமான ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Information Minister Anurag Thakur warned OTT streaming platforms for giving so many obscenity in the name of creativity freedom will face a big problem soon. Anurag Thakur gives a big warning to leading OTT platforms for their adult and rudeness content.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X