Irugapatru OTT Release: தியேட்டரில் வரவேற்பைப் பெற்ற இறுகப்பற்று... OTT ரிலீஸுக்கும் ரெடி
சென்னை: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்த இறுகப்பற்று திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஃபேமிலி சென்டிமெண்ட் உடன் ஃபீல்குட் படமாக வெளியான இறுகப்பற்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதன்படி இந்த படம் அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுகப்பற்று ஓடிடி ரிலீஸ் அப்டேட்
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், சானியா அய்யப்பன், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் இறுகப்பற்று. யுவராஜ் தயாளன் இயக்கிய இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. மினிமம் பட்ஜெட்டில் ஃபீல்குட் படமாக உருவான இறுகப்பற்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்றைய வாழ்க்கைச் சூழலில், கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளையும், அதற்கான பின்னணி என்ன, தீர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்பன பற்றியும் பேசியது. விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா அய்யப்பன் என இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையேயான பிரச்சினைகள் தான் இறுகப்பற்று படத்தின் ஒன்லைன்.
குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான இந்தப் படம், பிரசாரத்தன்மை இல்லாமல் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தது. உறவுகள், உணர்வுகள், உளவியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், இறுதிவரை ஃபீல் குட் தன்மை மாறாமல் இருந்தது ரசிகர்களிடம் படத்துடன் ஒன்ற வைத்தது. அதேபோல் ஃபேமிலி சென்டிமென்ட் என்பதால் சோகமயமாக இல்லாமல், காமெடியாகவும் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் யுவராஜ் தயாளன்.
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது இறுகப்பற்று. அதேபோல், விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் இந்தப் படத்தில் ஸ்கோர் செய்திருந்தனர். தியேட்டர் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த இறுகப்பற்று, தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. விஜய்யின் லியோ வெளியான பின்னரும் இறுகப்பற்று படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு உள்ளது.

இருப்பினும் இந்தப் படம் அடுத்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அக்டோபர் 3ம் தேதி முதல் இறுகப்பற்று படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இதனால், இறுகப்பற்று திரைப்படம் ஓடிடியிலும் நல்ல ரீச் ஆகும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











