Don't Miss!
- News
"கூரை ஏறி முடியாதவர் வைகுண்டம் போவாராம்".. திரௌபதி முர்மு ஊரில் மின்சாரமே இல்லை.. வாசுகி விளாசல்
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Finance
முதல்நாளே இப்படியா? பாவம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 540 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மாறும் மக்களின் ரசனை...புது படங்கள் அவ்வளவு மோசமாவா இருக்கு...கோலிவுட்டை அதிர வைத்த ஓடிடி
சென்னை : ஓடிடி.,யின் சமீபத்திய புள்ளிவிபரம் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. மக்களின் ரசனை மாறி வருகிறதா அல்லது தற்போது எடுக்கப்படும் தமிழ் படங்கள் மோசமாக உள்ளதா என தெரியாமல் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.
தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால் டிவியில் மட்டுமே படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலை தற்போது இல்லை. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதனால் தியேட்டர், டிவி.,யில் வாங்காத படங்கள் முடங்கி கிடக்கும் நிலை மாறி, ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மே 20ஐ மறக்காத விஜய்.. கண்கலங்க வைக்கும் காரணம்.. குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்யின் அம்மா!

ஓடிடி.,யில் தமிழ் படங்கள்
தற்போது தமிழில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 படங்களாவது ஓடிடி.,யில் ரிலீசாகி விடுகிறது. அதோடு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படலாம் என்ற நிலை உள்ளதால், பெரிய படங்கள் - சிறிய படங்கள் என மாதத்திற்கு குறைந்தது 20 படங்களாவது தமிழில் ரிலீஸ் ஆகிறது. இது தவிர வெப் சீரிஸ்கள் பலவும் வெளியிடப்படுகின்றன.

மக்களை கவரும் படங்கள்
சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாமல் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றன. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ஓடிடி.,யில் ரிலீசாகி மக்களின் வரவேற்பை பெறும் படங்கள் ஒரு சில தான். சில படங்களை பார்த்து விட்டு, இது போன்ற படங்களை ஏன் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்கிறார்கள் என்று கூட ரசிகர்களே கேட்டு வருகிறார்கள். ஆனால் இது போன்ற உணர்வை ஏற்படுத்தி, ரசிகர்களின் ஆதரவை பெறுவது மிக அரிதாக வரும் ஒரு சில படங்கள் மட்டும் தான்.

அதிர வைத்த ஓடிடி
புது படங்கள், பெரிய நடிகர்கள் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என தொடர்ந்து ஓடிடி.,யில் ரிலீசாகி கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சமீப நாட்களாக ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட, அதிகமானவர்களால் ரசிக்கப்பட்ட படங்களின் புள்ளி விபரங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், கோலிவுட்டிற்கு அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது. அப்படி என்ன நடந்தது என கேட்கிறீர்களா... ஓடிடியில் சமீப நாட்களாக அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மிக மிக குறைவாக மட்டுமே சமீபத்தில் அல்லது புதிதாக ரிலீசான படங்கள் உள்ளன.

என்னங்க சொல்றீங்க...இது உண்மையா
மற்றபடி அதிகமானவர்கள், நாயகன், தளபதி, மன்னன், அண்ணாமலை, சிங்கார வேலன், அக்னி நட்சத்திரம், மெளனராகம் போன்ற படங்களை தான் விரும்பி பார்த்துள்ளனர். சோஷியல் மீடியாக்களிலும் பலர் இது போன்ற 80, 90 களில் சூப்பர் ஹிட்டான படங்கள் ஓடிடி.,யில் இருப்பதாக கூறி, அவற்றை பார்க்கும் படி பரிந்துரை செய்து வருகின்றனர். 80, 90 படங்கள் மட்டுமல்ல ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், நாடோடி மன்னன் போன்ற டிஜிட்டலில் மாற்றப்பட்ட பழைய படங்களை பார்க்கவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புது படங்கள் மோசமாவா இருக்கு
ரசிகர்கள் புதிய படங்களை பார்க்க தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் பழைய படங்களை பார்க்க தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உண்மையிலேயே மக்களின் ரசனை மாறி வருகிறதா அல்லது தற்போது வரும் புதிய படங்கள் அவ்வளவு மோசமாக உள்ளதா என குழம்பிப் போய் உள்ளனர்.