தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?

சென்னை : அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடிய த்ரில்லர் படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் கார்த்திக் நரேன்

மாஃபியா வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தை இயக்கி வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்படுகிறது.

த்ரில்லர் கதைகளை

த்ரில்லர் கதைகளை

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே சிக்சர் அடித்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான த்ரில்லர் கதைகளை இயக்கக்கூடிய இயக்குனர்களில் முக்கியமானவராக கார்த்திக் நரேன் இணைந்துள்ளார்

மாஃபியா

மாஃபியா

துருவங்கள் பதினாறு கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுக்கு பெரும் சோதனையாக இந்தப்படம் பல்வேறுபட்ட பணப் பிரச்சினைகளை சந்தித்து இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது. அதனையடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவான மாஃபியா திரைப்படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

செம ஸ்டைலிஷாக தனுஷ்

செம ஸ்டைலிஷாக தனுஷ்

இப்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் ஆக்சன் கதை களத்தில் செம ஸ்டைலிஷாக தனுஷ் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். அனைத்து கட்ட படப்பிடிப்பு பணிகளும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. வழக்கமாக த்ரில்லர் கதைகளை எடுக்கும் கார்த்திக் நரேன் இந்த முறை ஆக்சன் திரைப்படமாக மாறன் படத்தை இயக்கி வருகிறார்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

மேலும் மாறன் தனுஷ் ஸ்டைலில் பாதியும், கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாறன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தெறிக்க விட்டது. போஸ்டரில் தனுஷ் செம ஸ்டைலிஷாக இருக்க எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. மாஸ்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த மாளவிகா மோகனன் இப்பொழுது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

மேலும் மூக்குத்தி அம்மன் பட புகழ் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் சூரரைப்போற்று கிருஷ்ணா இந்த படத்தில் இணைந்து இருக்க படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் மாறன் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X