twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உளவியல் பிரச்சினைகளை தருகிறதா ஓடிடி Binge -watching?

    |

    சென்னை : கொரோனா லாக்டவுன் காரணமாக மக்களிடையே ஓடிடி தளங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

    இதில் ரிலீசாகும் தொடர்களின் அனைத்து எபிசோடுகளையும் ஒரே மூச்சாக பார்க்கும் பழக்கமும் நம்மிடையே தொற்றியுள்ளது.

    மது, சிகரெட் போன்று மக்கள் இதற்கும் அடிமையாக மாறுகிறார்களாக என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    டாப் 5 போட்டியாளர்கள் ? … இந்த வார டேஞ்சர் ஜோனில் இருப்பது யார்?டாப் 5 போட்டியாளர்கள் ? … இந்த வார டேஞ்சர் ஜோனில் இருப்பது யார்?

    சிறப்பான பொழுதுபோக்கு

    சிறப்பான பொழுதுபோக்கு

    கடந்த காலங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்கு ஒரே வடிகாலாக அமைந்திருந்தது திரையரங்குகள் மட்டுமே. தங்களது பொழுதுபோக்கிற்காக இதை நாடி செல்வது மக்களின் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஓடிடி வந்தபிறகு உள்ளங்கையில் நமது பொழுது போக்கு வந்துள்ளது.

    வீட்டிற்குள் முடங்கும் நிலை

    வீட்டிற்குள் முடங்கும் நிலை

    அதிலும் கொரோனாவால் வீட்டிற்குள் மக்கள் முடங்கும் நிலை வந்தபிறகு ஓடிடி திரையரங்குகளை ஓரம்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மாதாந்திர சேவை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்திவிட்டு தங்களுக்கு பிடித்தமான படங்களை மக்கள் பார்க்கும் நிலையை ஓடிடி தளங்கள் ஏற்படுத்தி தந்துள்ளன.

     பிஞ்ச் வாட்சிங் பழக்கம்

    பிஞ்ச் வாட்சிங் பழக்கம்

    இது நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும் கொரோனாவால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் இரவு பகல் பார்க்காமல் தங்களை ஓடிடி தளங்களில் புகுத்திக் கொள்ளும் சூழலும் காணப்படுகிறது. ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் அல்லது ஒரு தொடரில் பல எபிசோட்களை ஒரே நேரத்தில் பார்க்கும் பிஞ்ச் வாட்ச் என்று கூறப்படும் பழக்கத்திற்கு மக்கள் தற்போது ஆட்பட்டு வருகின்றனர்.

    உளவியல் பிரச்சினைகள்

    உளவியல் பிரச்சினைகள்

    இவை மக்களின் தூக்கம் மற்றும் நேரத்தை அதிகமாக விழுங்கி வருகின்றன. மேலும் தங்களது பிரச்சினைகளில் இருந்து தங்களை ஒளித்துக் கொள்ளும் காரணிகளாகவும் இவற்றை மக்கள் பயன்படுத்துவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மன அழுத்தம்

    மன அழுத்தம்

    ஓடிடியில் நாளுக்கு நாள் அதிக மணி நேரங்களை செலவழித்து தொடர்களை பார்ப்பதும் ஒருவகையான மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இவ்வாறு பார்க்க முடியாதவர்கள் உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    நிபுணர்கள் ஆலோசனை

    நிபுணர்கள் ஆலோசனை

    இதிலிருந்து தப்பிக்க ஓடிடியில் ஒரு தொடரை பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாதியில் நிறுத்துவதை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் ஒருநாளில் இவ்வளவு நேரம்தான் பார்க்க வேண்டும் என்ற உறுதியை வைத்துக் கொண்டு தொடர்களை பார்ப்பதையும் அறிவுறுத்துகின்றனர்.

    English summary
    OTT Binge Watching makes people addiction?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X