twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது மாநாடு ஆங்கிலப்படமா?, அரை மணி நேர ஆஸ்கர் வின்னிங் படம்

    |

    சென்னை; சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிக்கரமாக ஓடும் சிம்புவின் மாநாடு படத்தின் அடிப்படை கருவைக்கொண்டுள்ளது நெட் ஃபிலிக்சில் உள்ள ஒரு ஆங்கிலப்படம். அரை மணி நேர ஆஸ்கர் வின்னர் படமான இதில் மெல்லிய சோகமும் இழையோடும் வகையில் அமைந்துள்ளது.

    நிறைய பேரு தியேட்டர் போயி பாக்க முடியல... காரணத்தை ஓப்பனா பேசிய முகேன்ராவ்நிறைய பேரு தியேட்டர் போயி பாக்க முடியல... காரணத்தை ஓப்பனா பேசிய முகேன்ராவ்

    சிம்புவின் மாநாடு திரைப்படம்

    சிம்புவின் மாநாடு திரைப்படம்

    சிம்பு நடிப்பில் பெருத்த சர்ச்சைக்குப்பின் வெளியானது மாநாடு திரைப்படம். வித்தியாச கதைக்கரு இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம், எஸ்.ஜே.சூரியா வில்லனாக நடித்துள்ளார், அரசியலை மையப்படுத்திய படம் என்பதால் பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் வெளியாகி அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் இருந்ததால் நன்றாக ஓடுகிறது.

    மாநாடு படத்தை ஞாபகபடுத்தும் படம் நெட்ஃபிலிக்ஸில்

    மாநாடு படத்தை ஞாபகபடுத்தும் படம் நெட்ஃபிலிக்ஸில்

    மாநாடு பட கதைக்கரு ஏற்கெனவே பல படங்களில் உள்ள கருவை வெங்கட்பிரபு தனது தேர்ந்த கதை அமைக்கும் திறனால் அரசியல் கலந்து அதில் தற்போதுள்ள நடப்புகளை வசனங்களாக வைத்து உருவாக்கியுள்ளார். மாநாடு படத்தின் கதைக்கரு போல் நெட்பிலிக்ஸ் தளத்தில் ட்ராவன் ஃப்ரீ என்பவர் எழுதி இயக்கியுள்ள படம் 'டூ டிஃபரண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்' (Two Differnt Strangers).

    32 நிமிட குறும்படம்

    32 நிமிட குறும்படம்

    இந்தப்படம் 32 நிமிடம் மட்டுமே ஓடும் குறும்படம். படத்தின் ஹீரோ கருப்பின இளைஞரான Joey Badass தனது காதலியுடன் அவர் வீட்டில் படுக்கையறையில் இருப்பதாக படம் ஆரம்பிக்கிறது. பின்னர் தனது வீட்டில் தனியாக இருக்கும் தனது வளர்ப்பு நாயை பார்க்க வேண்டும் என காதலியிடம் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியில் வருகிறார். அப்போது சாலையில் சிகரெட் பற்றவைத்து புகைக்கும்போது ஒரு நபர் மீது மோதிவிடுகிறார். அவரிடம் மன்னிப்பு கேட்டு திரும்புபோது அங்கு வரும் போலீஸ் அவரை சோதிக்கவேண்டும் என்கிறது.

    அடிமைபோல் நடத்தும் போலீஸார்

    அடிமைபோல் நடத்தும் போலீஸார்

    கவுரவமான பணியில் இருக்கிறேன், எனது வீட்டுக்கு போக நிற்கிறேன் நான் என்ன தவறு செய்தேன் என அவர் மல்லுக்கட்ட ஆத்திரமடைந்த போலீஸ் அவரை தரையில் கையை பின்னால் பிடித்து விலங்கை போட முயல அங்கு உதவிக்கு ஓடிவரும் மற்ற போலீஸாரும் அவர் காலை கெட்டியாக பிடித்துக்கொள்ள முதல் போலீஸார் கழுத்தை இறுக்கிய நிலையில் என்னால் சுவாசிக்க முடியவில்லை என கதறுகிறார்.

    போலீஸாரால் கொல்லப்படும் ஹீரோ

    போலீஸாரால் கொல்லப்படும் ஹீரோ

    தரையில் முகம் அழுந்திய நிலையில் மூச்சு விட சிரமப்பட்டு கதறும் கருப்பின இளைஞராக அவர் அமெரிக்க வெள்ளையின போலீஸால் காலில் முகம் மிதிக்கப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டை நம் கண் முன் வந்து நிறுத்துகிறார். போலீஸ்காரர் கழுத்தை நெறிப்பதால் இவரும் உயிரிழக்கிறார், ஆனால் அடுத்த நொடி காதலியின் அருகில் கட்டிலில் கண் விழிக்கிறார்.

    மாநாடு படத்தைப்போல் கரு

    மாநாடு படத்தைப்போல் கரு

    மாநாடு படம் போல் அடுத்தடுத்து அதேபோல் கொல்லப்பட்டு உயிர் பிழைக்கிறார். அவர் வீட்டைவிட்டு வெளியில் சென்று தனது வீட்டுக்கு போய் தனது நாய்க்கு உணவு வைத்தாரா? நிலைமையை எப்படி சமாளித்தார் என்பது மீதிக்கதை. இடையில் போலீஸுடன் வாதிடும்போது கருப்பின மக்களை வெள்ளையின போலீஸ் நடத்தும்முறை பற்றிய வசனங்களும் கூர்மையாக வைக்கப்பட்டுள்ளது.

    ஜார்ஜ் பிளாயிடு மரணம்

    ஜார்ஜ் பிளாயிடு மரணம்

    படம் முடிவடையும்போது வரிசையாக திரையில் பெயர்கள் வருகிறது. அவை படத்தில் பணியாற்றிய கலைஞர்களா என்று பார்த்தால் இல்லை, ஜார்ஜ் பிளாய்டு போல் வெள்ளையின போலீஸாரால் கொல்லப்பட்ட அப்பாவி கருப்பின மக்களின் பெயர் பட்டியல் அது. கனத்த மனதுடன் படம் முடிகிறது. போலீஸாரின் கொடூரமான நடத்தையால் நட்டநடுச்சாலையில் உயிரைவிட்ட ஜார்ஜ் பிளாயிடு முகம் ஞாபகத்துக்கு வந்து போகிறது.

    ஆஸ்கர் விருது, வாரிக்குவித்த வசூல்

    ஆஸ்கர் விருது, வாரிக்குவித்த வசூல்

    இந்தப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது அதே ஆண்டில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதையும், ஆப்பிரிக்க-அமெரிக்க திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும் பெற்றது. அதுமட்டுமல்ல இந்தப்படம் அதிக அளவில் வசூலையும் (4.5 லட்சம் டாலர் ) அள்ளிக்கொடுத்துள்ளது. நெட்பிலிக்ஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் இது. உடனே பாருங்கள்.

    English summary
    Is this a 'Manadu' English film? - NETFLIX ... Half an hour Oscar winning film ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X