அடேங்கப்பா லியோ டப்பிங் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் எவ்வளவு கொடுத்து வாங்கிருக்கு தெரியுமா?

சென்னை: லியோ படத்தின் டப்பிங் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் அடுத்த படத்தை ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய்.

லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக கூட்டணி

லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக கூட்டணி

இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் விஜய். ஏற்கனவே இந்த கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் மெகா ஹிட்டானது. இதனால் இவர்கள் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லியோ படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அதற்கேற்றபடி லியோ படத்தின் ப்ரோமோவும் பட்டாசாக அமைந்தது. ப்ரோமோவில் விஜய் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருக்கும்படியும், அவரைத் தேடி ஒரு கும்பல் வருவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங்

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங்

படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. சமீபத்தில்தான் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியது படக்குழு. இதனையடுத்து சென்னையிலும், ஹைதராபாத்திலும் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.

ரசிகர்களை வாய் பிளக்க வைத்த மேக்கிங் வீடியோ

ரசிகர்களை வாய் பிளக்க வைத்த மேக்கிங் வீடியோ

இதற்கிடையே காஷ்மீரிலிருந்து லியோ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ எப்போதும் போல் படத்தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்களை மட்டும் வைத்து உருவாக்காமல் ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் வேலை செய்தவர்கள், சமையல்காரர்கள், உதவி இயக்குநர்கள், லைட் மேன்கள் என பலரையும் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மேக்கிங் வீடியோ வருவது இதுவே முதல்முறை என்பதால் லோகேஷ் கனகராஜை பலரும் பாராட்டினர்.

லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸ்

லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸ்

லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸ் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன்படி படத்துக்கான வியாபாரம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நடந்திருக்கிறது என்ற தகவல் பரவியது. ஒரு படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே இவ்வளவு பெரிய வியாபாரம் நடந்திருப்பது பெரும் சாதனை என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஓடிடி உரிமம் எவ்வளவு தெரியுமா?

ஓடிடி உரிமம் எவ்வளவு தெரியுமா?

லியோ படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் பிற மொழிகளில் ஓடிடியில் லியோ படத்தை வெளியிடுவதற்கான டப்பிங் உரிமத்தை நெட்ஃப்ளிஸ் நிறுவனம் 75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறதாம். அதேபோல் இதன் ஆடியோ உரிமம் 19 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X