உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட “ஜெய் பீம்“… கதை என்ன?
சென்னை : சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தின் கதை குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்பீம் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தா செ ஞானவேல் இயக்கி உள்ளார்.
இதில் முக்கியமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

சூர்யாவின் 39பது படம்
சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நடிகர் அருண் விஜய்யின் மகன் இப்படத்தின் முக்கிய கதாபாத்தில் நடிக்க உள்ளார்.

ஒரு உண்மை சம்பம்
இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாகும். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடித் தொடங்குகிறாள். உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டம்
பழங்குடிப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும் தான் ஜெய்பீம். இருளர்களின் வாழ்க்கை குறித்த சில காட்சிகளும் இப்படத்தில் உள்ளன. இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது.ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ந் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

உடன்பிறப்பே
சூர்யாவின் 2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம் முதல், மாதம் ஒரு படம் என அடுத்த நான்கு மாதங்களுக்கு மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளன. அதன்படி அதில் ஜோதிகா சசிகுமார் நடித்த உடன்பிறப்பே ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

நல்லவரவேற்பு
ரம்யா பாண்டியன், வாணி போஜன் நடித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது வியந்து பாராட்ட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











