ஜெயிலர் 2 ஓடிடி இத்தனை கோடிக்கு வியாபாரமா?.. யார் வாங்கிருக்காங்க தெரியுமா?.. செம மாஸ்

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ஜெயிலர் 2. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதில் ஷாருக்கான் முதலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட இப்போது அவருக்கு பதிலாக பவன் கல்யாண் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் ஜெயிலர் படத்தில் மெகா வெற்றியை பார்த்துவிட்டார்கள். தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து கார் பரிசு, அடுத்த படத்துக்கான ஆஃபர் என்று வெற்றி களைகட்டியது. அதன்படி ஜெயிலர் 2 படத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். ரஜினி ஒரு பக்கம் வேட்டையன், கூலியில் பிஸியாகிவிட; நெல்சனோ அந்த கேப்பை பயன்படுத்திக்கொண்டு படத்தின் கதையையும், திரைக்கதையையும் அபாரமாகவடிவமைத்திருக்கிறார் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.

Jailer 2 OTT Rights Sold for a Record Price Rajinikanth Starrer Trends Big
Photo Credit:

விறுவிறு ஷூட்டிங்: இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் விஜய் சேதுபதி முக்கிய ரோலை ஏற்றிருக்கிறாராம். அவருக்கு கெஸ்ட் ரோல்தான் என்றாலும் அது கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும்படி அமைந்திருக்கும் என்கிறார்கள். இவரைப் போன்றே ஷாருக்கானிடமும் பேசியிருந்தார்கள். ஆனால் அவர் முதலில் நடிப்பதாக கமிட்டாகிவிட்டு; அதனையடுத்து விலகிவிட்டதாக தெரிகிறது. மேலும் அவருக்கு பதிலாக பவன் கல்யாண் அவ்வேடத்தை ஏற்றிருக்கிறாராம். படத்தின் ஷூட்டிங்கும் இந்தியாவின் பல பகுதிகளில் விறுவிறுவென்று நடந்தது.

Also Read
விஜய் படத்தால் வந்த பிரச்னை.. திணறிய தயாரிப்பாளர்.. மிஸ் ஆன தனுஷ் படம்.. என்ன நடந்தது தெரியுமா?
விஜய் படத்தால் வந்த பிரச்னை.. திணறிய தயாரிப்பாளர்.. மிஸ் ஆன தனுஷ் படம்.. என்ன நடந்தது தெரியுமா?

படம் ஹிட்டாகுமா?: ரஜினிக்கு இந்தப் படத்தின் வெற்றி ரொம்பவே முக்கியமாகும். கடைசியாக அவர் நடித்த கூலி, வேட்டையன் இரண்டு படங்களுமே மெகா ஹிட்டெல்லாம் இல்லை. அதிலும் கூலிக்கு ஏற்பட்ட நிலைமை அவரது கரியரில் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாகிவிட்டது. லோகேஷ் கனகராஜுக்கும் அந்தப் படத்தின் தோல்வி மார்க்கெட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இதற்கு முன்னர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் மெகா ஹிட்டை பெற்றார். எனவே அதனை தக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம்.

கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும். ஏனெனில் ஜெயிலர் 2 படத்தின் கதைக்கும், திரைக்கதைக்கும் நெல்சன் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அனிருத்தும் தன் பங்குக்கு சிறந்த இசையை கொடுப்பார் என்பதால் இந்த நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸாக ஒரு விஷயம் இருக்கிறது. அது இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் வியாபாரம் பற்றியது.

என்ன விஷயம்?: அதாவது ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் மொத்தம் 160 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறதாம். இதுவரை கோலிவுட்டில் வேறு எந்த படத்துக்கும் இவ்வளவு பெரிய ஓடிடி வியாபாரம் நடந்ததில்லை. 75 வயதில் உழைப்பில்தான் ரஜினிகாந்த் டஃப் கொடுக்கிறார் என்று பார்த்தால்; வியாபாரத்தில் அசுர பலத்துடன் இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. மேலும் ரஜினி ரசிகர்களோ இதுதான் எங்கள் தலைவரது உண்மையான பவர் என்று ஆனந்த கூத்தாடி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X