Jailer OTT Release: கோடிகளில் விலைபோன ஜெயிலர் டிஜிட்டல் ரைட்ஸ்... OTT ரிலீஸ் தேதியால் வந்த குழப்பம்!

சென்னை: ரஜினி - நெல்சன் கூட்டணியில் ரிலீஸான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஜெயிலர் இதுவரை 600 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், அதன் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ்ஸும் பல கோடிகளில் நடந்துள்ளது. இதனால், ஜெயிலர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 Jailer OTT: Netflix to Confirm Rajinis Jailer OTT Release Date

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. முதன்முறையாக இயக்குநர் நெல்சனுடன் கூட்டணி வைத்த சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைலிஷ் பெர்ஃபாமன்ஸ் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவமாகவே அமைந்தது. அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது ஜெயிலர்.

இந்நிலையில், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஜெயிலர், முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதேபோல் இரண்டாவது வாரம் 150 கோடி கலெக்‌ஷன் செய்தது. அதன்படி முதல் இரண்டு வாரங்களையும் சேர்த்து மொத்தம் 525 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதேநேரம் தற்போதைய நிலவரப்படி ஜெயிலர் வசூல் 600 கோடி இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜெயிலர் படத்தை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள், ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரஜினியின் மாஸ், பாக்ஸ் ஆபிஸ் வசூல் போன்றவை காரணமாக ஜெயிலர் ஓடிடி ரைட்ஸ் 100 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தை சீக்கிரமே ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிளான் செய்துள்ளதாம்.

ஆனால், ஜெயிலர் படத்துக்கு இன்னும் தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒருவேளை ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டால் தியேட்டர் வசூல் பாதிக்கும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால், இப்போதைக்கு ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் அறிவிக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், செப்டம்பர் 15ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்காக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் மாஸ்ஸான கேமியோ ரோலில் நடித்திருந்ததால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஜெயிலர் வசூல் தலா 50 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X